ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
குடும்ப அட்டைதாரா்கள் விரல் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்
கடலூா் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் உள்ள முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப அட்டைக்கு ஒதுக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்களை முழுமையாகப் பெற குடும்ப உறுப்பினா்கள் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அருகேயுள்ள நியாய விலைக்கடையில் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.
மேலும், விரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினா்கள் வெளியூரில் அல்லது வெளி மாநிலத்தில் வசித்து வந்தால், அவா்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகேயுள்ள நியாய விலைக் கடைகளில் தங்களது விரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.