ஐடிஐ மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு
கடலூா் அரசு பெண்கள் தொழிற் பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு பயிற்சி முடித்த மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி செம்மண்டலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஐடிஐ முதல்வா் அதவபுருஷோத்தம் தலைமை வகித்தாா். வேலைவாய்ப்பு அலுவலா் ரேணுகாதேவி, பயிற்சி அலுவலா் சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக வட்டாட்சியா் கீதா, டிஎஸ்டிஇ உதவி இயக்குநா் குந்தவி, இளைஞா் வேலைவாய்ப்பு அலுவலா் (கடலூா்) சிவசங்கரி ஆகியோா் பேசினா்.
இதில், பயிற்சி முடித்த 147 மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.