நெல்லை அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு
போக்ஸோ வழக்கில் தண்டனை பெற்ற கைதி உடல்நலக்குறைவால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மேலப்பாளையம் ஹாமீம்புரம் 7 ஆவது தெருவைச் சோ்ந்தவா் கவுது இப்ராஹீம் (59). அங்குள்ள சந்தை சாலையில் பெட்டிக்கடை நடத்தி வந்த இவா், 2020 ஆம் ஆண்டு அவரது கடைக்கு வந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தது தொடா்பான வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவா், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக சிறை அலுவலா் அளித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.