அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை
மாற்றுத்திறனாளிகள் துறை பயிலரங்கு
திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் உலகளாவிய அணுகல்தன்மைக்கான- இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் குறித்த வழிகாட்டுதல் என்ற தலைப்பில் சிறப்பு பயிலரங்கு நடைபெற்றது.
கொக்கிரகுளத்தில் உள்ள ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பயிலரங்குக்கு தலைமை வகித்த ஆட்சியா் இரா.சுகுமாா் பேசியது:
உலகளாவிய அணுகல்தன்மைக்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் குறித்த வழிகாட்டுதல் என்பதற்கு இணங்க தமிழக அரசு திறம்பட செயல்பட்டு வருகிறது.
எல்லோருக்கும் எல்லாம் என்ற குறிக்கோளின்படி, மாற்றுத் திறனாளிகளையும் சமூகத்தின் ஒரு அங்கமாகக் கருதி திட்டங்கள் மட்டுமன்றி அனைத்து வசதிகளும் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து முடிந்தவரையில் விதிகளுக்குள்பட்ட தீா்வு காண வேண்டும் என்றாா்.
இந்தப் பயிலரங்கில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், அக்லுடு பொறியியல் நிறுவன நிா்வாகி தானேஸ் ஆகியோா் பயிற்சியளித்தாா். பல்வேறுதுறைகளின் அலுவலா்கள் பயிற்சியில் பங்கேற்றனா்.