செய்திகள் :

கச்சத்தீவு திருவிழா நிறைவு: மீன்பிடிக்க கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

post image

கச்சத்தீவு ஆலய திருவிழாவையொட்டி விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடை நீக்கப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.

கச்த்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா 14,15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இதில், கலந்துகொள்ள ராமேசுவரத்தில் இருந்து 100 படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் செல்லுவதால் பாதுகாப்பு காரணத்திற்காக ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டன.

போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன்

இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1,500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கச்சத்தீவு திருவிழா நிறைவடைந்த நிலையில் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடையை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை நீக்கியது.

இதனைதொடர்ந்து, ராமேசுவரம்,பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்: எடப்பாடி பழனிசாமி

பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானத்தில் அவர் பேசுகையில், பேரவைத் தலைவர் பெரும்பாலான நேரங்களில... மேலும் பார்க்க

அப்பாவுக்கு எதிரான தீர்மானம்: காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனிடையே, எதிர்க்கட்சிகளான பாமக, பாஜக உறுப்ப... மேலும் பார்க்க

அதிமுக தீர்மானம்: பாஜக, பாமக புறக்கணிப்பு!

அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான வாக்கெடுப்பை பாஜக, பாமகவினர் புறக்கணித்தனர். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இன்று காலை சட்டப்பேரவ... மேலும் பார்க்க

போராட்டத்துக்கு சென்ற அண்ணாமலை கைது!

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்துக்கு சென்ற மாநில தலைவர் அண்ணாமலை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.சென்னை அடுத்த கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை, அக்கரை அருகே த... மேலும் பார்க்க

அதிமுக தீர்மானம்: செங்கோட்டையன் ஆதரவு!

பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை சட்டப்பேரவை 9.3... மேலும் பார்க்க

திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்? - அண்ணாமலை கேள்வி

திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டத்துக்கு செல்லும் முன் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், நானோ, பாஜக நிர்வாகிகளோ பேச... மேலும் பார்க்க