Sourav Ganguly: அதிரடி போலீஸ் கெட்டப்பில் டாடா... வெப் சீரிஸில் நடிக்கிறாரா சௌரவ...
Siragadikka aasai : ஜெயில் விஷயத்தை உடைத்த மனோஜ் - விரைவில் முத்துவின் பிளாஷ்பேக்?
Siragadikka aasai
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் மனதை சங்கடப்படுத்தும் ஒரு விஷயத்தை மனோஜ் மீண்டும் பேசிவிட்டார்.
கடந்த வார எபிசோடுகளில் மீனாவை தொழிலை விட்டே வெளியேற்ற வேண்டும் என சிந்தாமணி திட்டம் மேற்கொண்ட செயல்கள், அதனை மீனா எப்படி முறியடித்தார் என்பது ஒளிப்பரப்பானது.
மீனாவின் சாமர்த்தியத்தை முத்து அனைவர் முன்னிலையிலும் பாராட்டி மாலை அணிவித்தார். மனைவியின் வளர்ச்சியில் மனதார சந்தோஷப்படும் முத்துவின் குணத்தை அண்ணாமலை பாராட்டுகிறார்.

சமீபத்திய ப்ரோமோவில் முத்துவை சந்திக்க செல்வம் மனைவியுடன் வீட்டிற்கு வருகிறார். அவர்களுக்கு மீனா உணவு பரிமாறுகிறார். மனோஜ் இது பிடிக்காமல் செல்வத்தை அவமானப்படுத்துகிறார். இதனால் செல்வம் சாப்பிடாமல் பாதியிலேயே எழுந்து போகிறார். இதனால் முத்துவிற்கும் மனோஜிற்கும் சண்டை வருகிறது.
மனோஜ் முத்துவை பார்த்து, ``நீ ஜெயிலுக்கு போய்டு வந்தவன் தானே, நீ என்ன வேணும்னாலும் பண்ணுவ” என்று சொல்லிவிடுகிறார்.
இதனால் முத்து மனமுடைகிறார். மீனா முத்துவிடம் இதை பற்றி கேட்கிறார். அதோடு ப்ரோமோ முடிகிறது.
முத்து ஏன் ஜெயிலுக்கு போனார்?
இதற்கு முன்னரும் சில முறை முத்து ஜெயிலுக்கு போன விஷயத்தை பற்றிய காட்சிகள் வைக்கப்பட்டன. முத்து ஏன் ஜெயிலுக்கு போனார்? விஜயா ஏன் முத்துவை வெறுக்கிறார்? மனோஜ் செய்த தவறை முத்து மீது திருப்பிவிட்டதாக முத்து பலமுறை மனோஜை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அப்படி என்ன நடந்தது? இவையெல்லாம் முத்துவை பற்றிய பிளாஷ்பேக்கில் தான் தெரியவரும். ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பது அந்த தருணத்திற்காக தான்.

இன்று வெளியான மற்றொரு ப்ரோமோவில் ரோகிணி வித்யாவுடன் உணவகத்தில் சாப்பிடும் போது மனோஜை ஏமாற்றிய கதிர் என்ற நபரை ஹோட்டலில் வைத்து பார்க்கிறார். ரோகிணி அந்த நபரை பிடித்து கேட்க அவர் வேகமாக ஓடுகிறார். அவரை துரத்திக் கொண்டு ரோகிணி ஓடுகிறார். ரோகிணி கதிரை பிடிப்பாரா? என்பது நாளையப் எபிசோடில் தெரிய வரும்.
இதனிடையே பரசுவின் மகள் திருமணத்தில் மணியை அண்ணாமலை குடும்பம் பார்த்துவிட்டால், ரோகிணிக்கு பெரிய பிரச்னை வந்துவிடும். மலேசியா மாமாவாக நடித்த மணியை முத்து பார்த்துவிட்டால் என்ன நடக்கும் என்பதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks