செய்திகள் :

Bindhu Ghosh: ``நல்லா பழகுன சிலர் இப்ப வந்து பார்க்கலைன்னு வருத்தப்பட்டாங்க" - KPY பாலா

post image

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமான நடிகை பிந்து கோஷ் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் அவரைச் சந்தித்து அவரது சிகிச்சைக்காக உதவி செய்த 'கலக்கப்போவது யாரு' பாலாவிடம் பேசினோம்.

''ஒரு சீனியர் நடிகையா அவங்களைப் பத்தி எனக்குத் தெரியும். ஆனா சந்தித்ததில்ல, பேசினதில்ல. இந்த நிலையில் ஷகிலா மேடம் ஒரு நாள் என்கிட்ட பேசி, இவங்களுடைய பிரச்னையைப் பத்திச் சொன்னாங்க. உன்னால் ஏதாவது உதவி செய்ய முடிஞ்சா பண்ணுன்னு சொன்னாங்க. உடனே நான் அவங்க வீட்டுல போய் பார்த்தேன்.

என்னை அவங்க முன்ன பின்ன பார்த்ததில்லை. ஆனா ஷகிலா மேடம் சொல்லியிருப்பாங்க போல, அதனால என்னைப் பார்த்ததுமே அழ ஆரம்பிச்சிட்டாங்க. ஆறுதலாக சில வார்த்தைகள் பேசினேன். பிறகு உடல்நிலை குறித்துக் கேட்டப்போ, சில டாக்டர்கள் குணமாக்கிடலாம்னு நம்பிக்கை தெரிவிச்சிருக்கறதா சொன்னாங்க. உடல் பாடாய் படுத்தினாலும் மனசளவுல ரொம்ப உற்சாகமாக இருந்தாங்க. அதனால மீண்டு வந்துடுவாங்கன்னே தோணுச்சு.

தன்னுடைய சினிமா நாள்களைப் பத்தி அவ்வளவு ஆர்வமா பேசினாங்க. பழைய நினைவுகள் அவங்ககிட்ட அப்படியே இருந்துச்சு.

KPY பாலா

உடன் நடித்த நடிகர் நடிகைகள் பத்தி விசாரிச்சப்போ, முன்னடி ரொம்ப நல்லா பழகுன சிலர் இப்ப வந்து பார்க்கலைன்னு வருத்தப்பட்டாங்க. ஒரு மணி நேரத்துக்கும் மேல பேசிக்கிட்டிருந்தேன். பிறகு என்னால் முடிஞ்ச ஒரு தொகையைக் கொடுத்துட்டு வந்தேன். வேறு ஏதாவது உதவினாலும் கூப்பிடுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.

பார்த்துட்டு வந்து ஒரு மாசம் கூட இருக்காது. அதுக்குள்ள இப்படி ஒரு சோகம் நடந்திருக்கு. ரொம்ப வருத்தமா இருக்கு.

தற்சமயம் நான் வெளியூர்ல இருக்கறதால அவங்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கேன்'' என்றார் பாலா.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Siragadikka aasai : ஜெயில் விஷயத்தை உடைத்த மனோஜ் - விரைவில் முத்துவின் பிளாஷ்பேக்?

Siragadikka aasaiசிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் மனதை சங்கடப்படுத்தும் ஒரு விஷயத்தை மனோஜ் மீண்டும் பேசிவிட்டார். கடந்த வார எபிசோடுகளில் மீனாவை தொழிலை விட்டே வெளியேற்ற வேண்டும் என சிந்தாமணி திட்டம் ... மேலும் பார்க்க

`Baakiyalakshmi சீரியலில் இப்ப கோபிக்கு விவாகரத்து கொடுத்ததால..!' - ரேஷ்மா பசுபலேட்டி ஷேரிங்ஸ்

சின்னத்திரை, வெள்ளித்திரையில் பரிச்சயமானவர் ரேஷ்மா பசுபலேட்டி. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `பாக்கியலட்சுமி' தொடரிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `கார்த்திகை தீபம்' தொடரின் இரண்ட... மேலும் பார்க்க

Coolie Exclusive: "ரஜினி சார் பிறந்தநாள் அன்னைக்கு படத்துல அவர்கூட நடிச்சது..." - மோனிஷா ஷேரிங்ஸ்

`மாவீரன்' படத்தின்மூலம் பலருக்கும்பரிச்சயமானவர் மோனிஷா பிளசி. `டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியிலும் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். தற்போது வெளியாகி இருக்கும் `சுழல் 2' வெப் சீரிஸில் தன... மேலும் பார்க்க

`எதிரிகள் விலகிப் போவார்கள்' - 'ரணபலி' முருகனைத் தரிசித்த பின் நடிகை மதுமிதா

சென்ற மாதக் கடைசியில் அதாவது சிவராத்திரியன்று புதுச்சேரி அம்பலத்தடியார் மடம் போய் நாகலிங்கேஸ்வரரைத்தரிசித்து வந்தார் நடிகை மதுமிதா,'வருடத்துக்கு ஒரு முறை வெளியில் எடுக்கப்படும், சிவன் கைப்பட பனை ஓலையி... மேலும் பார்க்க

Ayyanar Thunai : சினிமாவை விஞ்சும் கதைகளம்... நிலா எடுக்கப் போகும் முடிவென்ன?!

விஜய் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் புதிய நெடுந்தொடர் அய்யனார் துணை. தனம், அய்யனார் துணை ஆகிய இரண்டு புதிய தொடர்களின் ப்ரோமோக்கள் ஒரே நேரத்தில் வெளியானது. நாயகி பெண் ஆட்டோ ஓட்டுன... மேலும் பார்க்க

Baakiyalakshmi : செல்வியை விட்டுக் கொடுத்த பாக்யா, எழிலின் வரம்பு மீறிய வார்த்தைகள்

பாக்யலட்சுமி சீரியல் கதைக்களம் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியிருக்கிறது. கல்லூரியில் படிக்கும் இனியா, பாக்யா வீட்டில் வேலை செய்யும் செல்வியின் மகனைக் காதலிக்கிறார். ஆகாஷ் பல சந்தர்ப்பங்களில் வெளியே ... மேலும் பார்க்க