பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை பாஜக அரசு வழங்குமா? அதிஷி கேள்வு!
Baakiyalakshmi : செல்வியை விட்டுக் கொடுத்த பாக்யா, எழிலின் வரம்பு மீறிய வார்த்தைகள்
பாக்யலட்சுமி சீரியல் கதைக்களம் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியிருக்கிறது. கல்லூரியில் படிக்கும் இனியா, பாக்யா வீட்டில் வேலை செய்யும் செல்வியின் மகனைக் காதலிக்கிறார். ஆகாஷ் பல சந்தர்ப்பங்களில் வெளியே சந்திக்க வேண்டும், வீட்டு விசேஷங்களில் சந்தித்துக்கொள்ள வேண்டாம் என்று இனியாவிடம் சொல்லியும் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இம்முறை இனியா-ஆகாஷ் காஃபி ஷாப்பில் சந்திப்பதை கோபி பார்த்துவிட்டார். கோபி இனியாவின் மொபைலை செக் செய்து, ஆகாஷும் இனியாவும் காதலிப்பதை உறுதி செய்துவிட்டார்.

கோபி வீட்டில் இருந்த அனைவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்கிறார். செழியன், கோபி, ஈஸ்வரி என அனைவரும் இனியாவைக் கடுமையாகத் திட்டுகின்றனர். செல்வியின் மகனை தரக்குறைவாகப் பேசுகின்றனர். இந்த வயதில் ஈர்ப்பு ஏற்படுவது சகஜம், அப்படி ஈர்ப்பு ஏற்படுவதற்குக்கூட தகுதி, தராதரம் வேண்டாமா? என்று செழியன் பேசியதெல்லாம் டூ மச்.
சீரியலின் ஆரம்பத்தில் செழியன், ஜெனி என்ற கிறிஸ்தவப் பெண்ணைக் காதலித்தபோது வேற்று மதம் என்பதால் ஈஸ்வரி பிரச்னை செய்வார். ஜெனி செழியனுக்காக வீட்டை விட்டு வந்துவிடுவார், வீட்டை எதிர்த்துத் திருமணமும் நடக்கும். அந்த திருமணக் காட்சிகள் சீரியல் மீது பலருக்கு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. ஆனால் இம்முறை எதே செழியன் ஸ்டேட்டஸ் என்று வரும்போது காதலுக்கு எதிரியாக மாறுவது முரண்.

செழியன் ஆகாஷை தரக்குறைவாகப் பேசும் காட்சிகள் கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தது. அதனைத் தவிர்த்திருக்கலாம். இந்தப் பிரச்னைகள் நடக்கும்போது செல்வி பாக்யாவின் வீட்டிற்கு வருகிறார்.
கோபி, செழியன் , ஈஸ்வரி மாறி மாறி செல்வியைத் திட்டும் போது பாக்யா அமைதியாக நின்றுக் கொண்டிருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொருவரும் மாறி மாறி செல்வியின் குடும்பச் சூழல், ஸ்டேட்டஸ், அவரின் கேரக்டர் என டோட்டல் டேமேஜ் செய்யும்போது, ``பாக்யா இப்பயாவது வாயத் திறந்து பேசும்மா’’ என்பதே ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்.
செல்வியைக் கடுமையாகத் திட்டி வீட்டைவிட்டே துரத்தும்வரை பாக்யா எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. செல்வி பாக்யாவின் சொத்துக்களை பங்குபோட மகனுடன் சேர்ந்து பிளான் போட்டுதான் இனியாவைக் காதலிக்க வைத்தார் என்று ஈஸ்வரி சொன்னபோது கூட பாக்யா எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. எழில் மட்டும் தான் இந்த விஷயத்தில் யதார்த்தத்தை எடுத்துச்சொல்ல முயற்சி செய்கிறார். ஆனால் ஈஸ்வரி அவரின் திருமண வாழ்க்கையைப் பற்றி விமர்சித்து எழிலையும் பேசவிடாமல் செய்கிறார்.

நேற்றைய எபிசோடில் இனியா பாக்யாவிடம் வந்து பேசுகிறார். ’’நான் தான் ஆகாஷைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன். ஆகாஷ் முதலில் இந்தக் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதெல்லாம் வேணாம் என்று ஆகாஷ் சொன்னான், “ என்று பாக்யாவிடம் சொல்கிறார். பாக்யா இனியாவைத் திட்டி அனுப்புகிறார்.
இந்த வாரத்திற்கான புரொமோவில் செழியனும் கோபியும் ஆகாஷ் வீட்டிற்கு செல்கின்றனர். ஆகாஷை தெருவில் வைத்து அடிக்கின்றனர். இனியா பக்கம் இனி வராத என்கின்றனர். இந்த விஷயம் பாக்யாவுக்குத் தெரிந்து, செழியனைக் கேள்வி கேட்கிறார். ஆகாஷை அடிக்கும் உரிமையை உனக்கு யார் கொடுத்தது என்று செழியனைக் கேட்கிறார் பாக்யா.