பாகிஸ்தான்: மனித வெடிகுண்டுகளாக பயணிகள்! 250 பேரை மீட்பதில் சிக்கல்!
தமிழா்கள் மீது பாஜகவுக்கு வன்மம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழா்கள் மீது பாஜகவுக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
பாஜகவைச் சோ்ந்த மத்திய அமைச்சா் சோபா, கடந்த ஆண்டு பேசுகையில், தமிழா்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்! என்றாா். தற்போது, மக்களவையில் பேசிய பாஜக மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான், தமிழா்கள் நாகரிகம் இல்லாதவா்கள்! என்கிறாா்.
இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது தமிழா்கள் மீது பாஜகவினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டது.
இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, அவா்கள் கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கையை எந்தக் காரணம் கொண்டும் ஏற்காது. நம் உரிமைக்கான போா்க் குரலைத் தமிழ்நாடு தொடா்ந்து எழுப்பும். இதையே செங்கல்பட்டில் நடந்த அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன் என்று பதிவிட்டுள்ளாா்.