TVK : 'உங்கள் மீதான விமர்சனங்களை மறைக்க பெரியாரை இழுப்பதா?' - மத்திய அரசுக்கு எத...
பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்குச் சிறப்பு ரயில்!
மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பௌர்ணமியன்றும் பல்வேறு ஊர்களிலிருந்தும் சிவ பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அந்தவகையில் நாளை மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.