செய்திகள் :

PAK Train Hijack: ``155 பேர் மீட்பு, 27 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..'' - பாகிஸ்தான் சொல்வதென்ன?

post image

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானால் தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் பலூச் விடுதலை படை (Baloch Liberation Army - BLA), தொடர்ச்சியாகப் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, குவெட்டா ரயில் நிலையத்தில் இந்தப் படை குண்டுவெடிப்பு நடத்தியது. இதில், 26 பேர் கொல்லப்பட்டனர். இத்தகைய சூழலில், பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்தப் படையைச் சேர்ந்த ஆயுதமேந்திய நபர்கள், நேற்று பெஷாவார் நகருக்கு சென்றுகொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைச் சிறைபிடித்தனர்.

Balochistan in Pakistan

ரயிலில் பயணம் செய்த பயணிகள், பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் என 400-க்கும் மேற்பட்டோரை அவர்கள் பணயக்கைதிகளாக பிடித்துவைத்தனர். இதில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் பலூச் விடுதலை படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், பாதுகாப்புப் படை வீரர்கள் சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பின்னர், இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட பலூச் விடுதலை படை, ரயிலிலிருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகளை விடுவித்துவிட்டு, 200-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களை மட்டுமே பிடித்து வைத்திருப்பதாகவும், தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பிடித்து வைத்திருப்பவர்களைக் கொன்றுவிடுவோம் எனவும் தெரிவித்தது. இருப்பினும், பயணிகள் யாரும் விடுவிக்கப்படவில்லை என்றும், எல்லோரும் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Balochistan Train Hijack - சித்திரிப்புப் படம்
Balochistan Train Hijack - சித்திரிப்புப் படம்

அதோடு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்ப முடியாது என்று தெரிவிக்க, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். இந்த நிலையில், பலூச் விடுதலை படையினரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்று, 155 பயணிகளை மீட்டிருக்கின்றனர்.

இதுகுறித்து, பாதுகாப்புப் படை தரப்பில் வெளியான தகவலில், ``155 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது." என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Tollgate: புதிதாக திறக்கவிருந்த டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்... வத்தலகுண்டில் நடந்தது என்ன?

திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழிச்சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலைக்காக திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த இரு வழிச்சாலையில் ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: 10 வருட பகை; வெட்டிச் சாய்க்கப்பட்ட ரௌடி... கொலையாளியைப் பிடித்த பொதுமக்கள்!

தஞ்சாவூர் அருகே உள்ள ஏழுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குறுந்தையன் (50). இவர் இன்று காலை தனக்கு சொந்தமான தோப்புக்கு, டூ வீலரில் சென்றார். அப்போது, பின்னால் வந்த கார் ஒன்று குறுந்தையன் சென்ற டூவீலர் ... மேலும் பார்க்க

நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரௌடி படுகொலை; காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர், வசூல்ராஜா (38). கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த வசூல்ராஜா, ரேஷன் கடை அருகே நின்று சிலருடன் பேசிக் கொண்டிர... மேலும் பார்க்க

வேலைக்கு போகச் சொன்னதால் ஆத்திரம்; பாட்டி தலையில் கல்லை போட்டு கொன்ற பேரன்-ராஜபாளையத்தில் அதிர்ச்சி!

ராஜபாளையம், தளவாய்புரத்தை அடுத்த செட்டியார்பட்டியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 75). இவரின் கணவர் நவநாதன் 20 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவரின் இறப்புக்கு பிறகு தனியே வசித்து வந்த சரஸ்வதிக்கு ஆற... மேலும் பார்க்க

பேருந்தை வழிமறித்து +1 மாணவனுக்கு அரிவாள் வெட்டு... காதல் விவகாரம்தான் காரணமா?

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் தங்ககணேஷ். இவரது மகன் தேவேந்திரன். 17 வயதான இவர், நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வ... மேலும் பார்க்க

ஆம்பூர் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; நீதிமன்றத்தில் சரணடைந்த அதிமுக பிரமுகர் - நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள வெங்கடசமுத்திரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சீகன்பால். அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர், மாதனூர் மேற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னா... மேலும் பார்க்க