செய்திகள் :

வேலைக்கு போகச் சொன்னதால் ஆத்திரம்; பாட்டி தலையில் கல்லை போட்டு கொன்ற பேரன்-ராஜபாளையத்தில் அதிர்ச்சி!

post image

ராஜபாளையம், தளவாய்புரத்தை அடுத்த செட்டியார்பட்டியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 75). இவரின் கணவர் நவநாதன் 20 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவரின் இறப்புக்கு பிறகு தனியே வசித்து வந்த சரஸ்வதிக்கு ஆறுதலாக, வீட்டுக்கு அருகே அவரின் மகன் பாலசுப்பிரமணியம் என்பவர் தனியே மற்றொரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

பாலசுப்பிரமணியத்தின் மூத்த மகன் ஸ்ரீதர். இவர், மது அருந்துவது, கஞ்சா உள்ளிட்ட தீயப்பழக்கங்களுக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இதனால் சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் தாயுடன் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வசிப்பதற்காக, அதே பகுதியில் வேறொரு வீட்டுக்கு குடிபெயர பாலசுப்பிரமணியம் வீட்டுப்பொருட்களை இடம் மாற்றி வந்துள்ளார். அப்போது மூதாட்டி சரஸ்வதி, ஊதாரித்தனமாக ஊர் சுற்றுவதை விட்டுவிட்டு சீக்கிரத்தில் சரியான வேலைக்குச் செல்லுமாறு தனது பேரனான ஸ்ரீதருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், புதிய வீட்டுக்கு பொருட்களை எடுத்துச் செல்லுமாறு கூறி கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், அருகே இருந்த அரிவாள்மனையை எடுத்து பாட்டியை வெட்டியுள்ளார்.

ஸ்ரீதர்

இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த நிலையில், ஆத்திரம் அடங்காமல் முதாட்டியின் தலையில் கல்லைப்போட்டு ஸ்ரீதர் கொலை செய்ததாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், கொலை சம்பவம் குறித்து தளவாய்புரம் போலீஸூக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், சரஸ்வதியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்: 10 வருட பகை; வெட்டிச் சாய்க்கப்பட்ட ரௌடி... கொலையாளியைப் பிடித்த பொதுமக்கள்!

தஞ்சாவூர் அருகே உள்ள ஏழுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குறுந்தையன் (50). இவர் இன்று காலை தனக்கு சொந்தமான தோப்புக்கு, டூ வீலரில் சென்றார். அப்போது, பின்னால் வந்த கார் ஒன்று குறுந்தையன் சென்ற டூவீலர் ... மேலும் பார்க்க

நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரௌடி படுகொலை; காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர், வசூல்ராஜா (38). கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த வசூல்ராஜா, ரேஷன் கடை அருகே நின்று சிலருடன் பேசிக் கொண்டிர... மேலும் பார்க்க

பேருந்தை வழிமறித்து +1 மாணவனுக்கு அரிவாள் வெட்டு... காதல் விவகாரம்தான் காரணமா?

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் தங்ககணேஷ். இவரது மகன் தேவேந்திரன். 17 வயதான இவர், நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வ... மேலும் பார்க்க

ஆம்பூர் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; நீதிமன்றத்தில் சரணடைந்த அதிமுக பிரமுகர் - நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள வெங்கடசமுத்திரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சீகன்பால். அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர், மாதனூர் மேற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னா... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி: திருமணம் மீறிய உறவு; கணவரைக் கொன்றுவிட்டு நாடகம்- ஆண் நண்பருடன் மனைவி சிக்கியது எப்படி?

கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனா (22). இவரது காதலி எலன் மேரி (21). இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். தனியார் விடுதியில் அரை எடுத்து தங்கியவர்கள் வ... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தல்; அமெரிக்க FBI தேடிவந்த இந்திய வம்சாவளி... பஞ்சாப்பில் கைதுசெய்த போலீஸ்!

அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் ஷெஹ்னாஸ் சிங். இவர் கொலம்பியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு போதைப்பொருள் கடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 26ம் தேதி அமெரிக்காவி... மேலும் பார்க்க