இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!
கும்பகோணம் மகாமக குளத்தில் ஏராளமானோர் புனித நீராடல்!
மாசி மகம் பெருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மகாமக திருக்குளத்தில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித நீராடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நடைபெறும் முக்கிய விழாவான மாசிமக பெருவிழா இன்று நடைபெறுகிறது. மாசி மாதம் பௌர்ணமி மற்றும் மக நட்சத்திரம் சேர்ந்து வரும் நாள் மாசி மக பெருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கும்பகோணம் மகாமக திருக்குளத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மாசி மகப் பெருவிழா கடந்த 3-ந் தேதி 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைணவ தலங்களில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மாசி மக தீர்த்தவாரி இன்று பிற்பகல் மகாமக திருக்குளத்தில் நடைபெறுகிறது.
மாசி மக திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலையிலிருந்து ஏராளமானோர் மகாமக குளத்தில் புனித நீராடி வருகின்றனர். மேலும் தங்களது முன்னோர்கள் ஆன்மா அமைதி பெற வேண்டி வழிபாடும் நடத்தி வருகின்றனர்.