டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.87.19 ஆக முடிவு!
Kharge: மாநிலங்களவையில் மன்னிப்பு கேட்ட கார்கே.. விரக்தியில் போட்ட பதிவு!
'தேசிய கல்வி கொள்கை' - தற்போதைய மக்களவை, மாநிலங்களவையின் ஹாட் டாப்பிக்.
கடந்த திங்கட்கிழமையில் இருந்து நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. தேசிய கல்வி கொள்கை திட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்பு என ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு அரசை 'நாகரிகமல்லாதவர்கள்' என்று குறிப்பிட்டதை விமர்சித்து மாநிலங்களவையில் மத்திய எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். அப்போது அவர் "இது சர்வாதிகாரத்தனம். எதிர்க்கட்சிகள் அரசை விமர்ச்சிக்க தயாராக உள்ளோம்" என்று கூறினார்.
"பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி பேசுவது கடும் கண்டனத்திற்குரியது" என்று மத்திய அமைச்சர் ஜெ.பி நட்டா எதிர்ப்பு தெரிவித்தார். அவரை தொடர்ந்து மாநிலங்களவையின் துணை சபாநாயகர் ஹரிவன்ஷும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து கார்கே, "நான் உங்களை குறித்து பேசவில்லை. அரசின் கொள்கையை எதிர்த்து தான் பேசினேன். நான் பேசியது கடுமையாக இருந்தால், மன்னித்துவிடுங்கள்" என்று மன்னிப்பு கேட்டார்.
இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கார்கே, "நாட்டின் ஒரு பகுதியின் சுயமரியாதையையும், ஒரு பகுதி மக்களையும் பண்பாடற்றவர்கள் மற்றும் நாகரிகமற்றவர்கள் என்று கூறினால், நீங்கள் அந்த அமைச்சரை பதவி விலக சொல்ல வேண்டும். மோடி அரசு நாட்டை பிரிப்பது குறித்தும், உடைப்பது குறித்தும் பேசுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
मेरे को ये कहना है कि इस देश के एक भाग को, एक भाग की जनता को, अगर आप उनके स्वाभिमान को ठेस पहुँचाने की बात करेंगे।
— Mallikarjun Kharge (@kharge) March 11, 2025
अगर आप ये कहेंगे कि वो "Uncultured और Uncivilized हैं", तो आप मंत्री से इस्तीफ़ा लो !
मोदी सरकार देश को Divide करने की बात कर रही है। ये देश को तोड़ने की बात कर… pic.twitter.com/VUCeIY1pTo
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
