Pakistan Train Hijack - காரணம் என்ன? யார் இந்த Balochistan liberation Army தீவிர...
NEP: ``உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள்'' - தர்மேந்திர பிரதானை சாடிய கனிமொழி
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுகவிற்கும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிற்கும் மோதல் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. நேற்று (மார்ச் 12) தர்மேந்திர பிரதான் பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், " பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் தொடர்பாக கூறி நான் பார்லிமென்டை நான் தவறாக வழிநடத்துவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். பார்லிமென்டில் நான் சொன்னதில் உறுதியாக இருக்கிறேன். கடந்த 2024 மார்ச் 15-ல் தமிழக பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை பகிர்கிறேன்.

தி.மு.க., எம்.பி.,க்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு வேண்டுமானாலும் பொய்களை அடுக்கி வைக்கலாம். ஆனால், ஸ்டாலின் தலைமையிான தி.மு.க., அரசு மக்களுக்கு நிறைய பதில் சொல்ல வேண்டி உள்ளது. மொழிப் பிரச்னையை திசைதிருப்பும் தந்திரமாக பேசி தங்கள் வசதிக்கு ஏற்ப உண்மைகளை மறுப்பது என்பது அவர்களின் நிர்வாகத்தை காப்பாற்றாது. தேசிய கல்விக் கொள்கை மீதான இந்த திடீர் நிலைப்பாடு ஏன்? தி.மு.க.,வின் அரசியல் செல்வாக்கை மீட்டெடுப்பதற்காகவே இந்த மாற்றம். தேசிய கல்விக் கொள்கையை அரசியல் பார்வையில் பார்க்க வேண்டாம். அரசியல் ஆதாயங்களைவிட தமிழகத்தில் உள்ள நமது குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
தர்மேந்திர பிரதானின் இந்தப் பதிவிற்கு அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது திமுக எம்பி கனிமொழியும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கனிமொழி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், " தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில், தமிழ்நாடு பிஎம்ஸ்ரீ பள்ளிகளை மாநில அரசு தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே ஏற்றுக் கொள்ளும் என்றும், மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் அல்ல என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
This letter clearly states that Tamil Nadu will accept PM SHRI schools only based on our State Government led-committee’s recommendations and not on your Union Government’s recommendation. Nowhere have we mentioned accepting the three-language policy or NEP in its entirety.… https://t.co/pOwQZIOpN8
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 12, 2025
மும்மொழிக் கொள்கை அல்லது NEP-ஐ முழுமையாக ஏற்றுக் கொள்வதாக நாங்கள் எங்குமே குறிப்பிடவில்லை. தமிழ்நாட்டிற்கு எது ஏற்றுக் கொள்ளத்தக்கதோ, அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs