டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.87.19 ஆக முடிவு!
தஞ்சாவூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மானோஜியப்பா வீதியில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயில் பல லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 9ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
இதையடுத்து தினமும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, இன்று நான்காம் கால யாகசாலை நிறைவு பெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள், சிவகணங்கள் இசைக்க, கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கக் கோபுர கலசங்களுக்குப் பூஜைகள் செய்து கோபுர கலசத்தின் மேல் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு மழையில் நனைந்துகொண்டு சுவாமியைத் தரிசனம் செய்தனர்.