செய்திகள் :

மேற்கு வங்கத்தில் விளையும் காளான், புற்றுநோய்க்கு மருந்தாகுமா? - புதிய கண்டுபிடிப்பு!

post image

காளான் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப்பொருள். எளிதாகவும் மலிவாகவும் சந்தைகளில் கிடைக்கிறது. காளானில் வைட்டமின் பி, டி, பொட்டாசியம், செலினியம் போன்ற தாதுக்கள், புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, நினைவாற்றலை அதிகரிப்பது, உடலில் கொழுப்பைக் குறைப்பது என காளானின் பயன்கள் ஏராளம்.

இந்த காளான்கள் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்.. உண்மைதான் அறிவியல் ஆய்வுகள் அப்படிதான் கூறுகின்றன.

இதையும் படிக்க | குழந்தை குண்டாக இருக்கிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!

மேற்கு வங்கத்தில் உள்ள பன்குரா மற்றும் பிர்பம் காடுகளில் உள்ள காளான்கள் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொல்கத்தா ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா நூற்றாண்டு கல்லூரியின் புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆய்வின் மூலமாக இதனைக் கண்டறிந்துள்ளனர்.

'நேச்சர்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இவர்களது ஆய்வு முடிவுகளின்படி, இப்பகுதியில் உள்ள 'குர்குரே சட்டு'(kurkure chhatu) எனும் உண்ணக்கூடிய காளான்கள் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இப்பகுதி மக்கள் இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் நிலையில் இந்த காளான்கள் புற்றுநோய் செல்களை, குறிப்பாக கருப்பை வாய், மார்பகம், நுரையீரல் புற்றுநோய் செல்களைத் தடுக்கிறது என தெரியவந்துள்ளது.

ஆய்வு சொல்வது என்ன?

"கீமோதெரபி போல அல்லாமல், இந்த காளானில் உள்ள சேர்மங்கள் புற்றுநோய் செல்களை மட்டுமே தாக்கி அழிக்கிறது, ஆரோக்கியமான செல்களை தொந்தரவு செய்வதில்லை. மேலும் கீமோதெரபி மேற்கொண்டபின்னர் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது.

இந்த காளானில் உள்ள சேர்மங்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் புற்றுநோய்க்கான மருந்துகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடலாம். புற்றுநோய் மருந்துகளை உருவாக்குவதில் இந்த காளான்கள் முக்கிய பங்காற்றும்" என்று ஆய்வின் முதன்மை ஆசிரியரான விஞ்ஞானி ஸ்வபன் குமார் கோஷ் தெரிவித்தார்.

பன்குராவில் உள்ள பெலியாடோர், ஜாய்பூர் மற்றும் கங்காஜல்-காட்டி வனப்பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட காளான்களில் (ஆஸ்ட்ரேயஸ் ஆசியாட்டிகஸ்) உள்ள F12 சேர்மங்களில்(6 சேர்மங்கள் கலவைகள்) புற்றுநோய் எதிர்ப்பு செல்கள் உள்ளன. மேலும் இதில் கணிசமான அளவு பீனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் அஸ்கார்பிக் அமிலங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. இவையனைத்தும் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுபவை.

கர்ப்பப்பை வாய், நுரையீரல், மார்பகப் புற்றுநோய் செல்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த காளான் சாறு உணவில் சேர்க்கப்பட்டு 24 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு, புற்றுநோய் செல் வளர்ச்சி சுமார் 90% குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 5-ல் 3 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். மேலும் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் அதிகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

உலகளவில் புற்றுநோய் தரவுகளின்படி, அமெரிக்காவில் 4-ல் ஒருவர் புற்றுநோயால் இறப்பதாகவும் சீனாவில் இரண்டில் ஒருவர் இறப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் இறப்பு விகிதத்தில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

இதையும் படிக்க | தைராய்டு பிரச்னையா! இதைச் சாப்பிடுங்கள்!!

இயற்கையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்து

ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகளுடன் புற்றுநோய் பரவுதலில் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்தில் இருந்தாலும், பன்குரா மற்றும் பிர்பும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருக்கிறது.

இந்த காளான்களைக் கொண்டு இயற்கையாக புற்றுநோய் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலமாக அடுத்த தலைமுறையை புற்றுநோயில் இருந்து ஓரளவு காக்க முடியும் என்றும் நம்புகின்றனர். எனினும் இந்த காளான்களின் செயல்திறனை மேலும் ஆராய மனிதனில் இன்னும் ஆய்வுகள் தேவை என்றும் கூறுகின்றனர்.

இந்த காளான்கள் மிகக்குறைந்த அளவே நச்சுத்தன்மை கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

மருந்தாகப் பயன்படும் காளான்

உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் காளான் பயன்படுகிறது. பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில், ஒரு நாளைக்கு இரண்டு காளான் (தோராயமாக 18 கிராம்) சாப்பிடுவது புற்றுநோயின் அபாயத்தை 45% குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, ஜப்பான் மற்றும் சீனாவில் புற்றுநோய் சிகிச்சைகளில் காளான்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மருத்துவக் காளான்கள் என்று அழைக்கப்படுகின்றன. குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைகளில் காளான்களின் சேர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் பல நாடுகளிலும் காளான்களைக் கொண்டு புற்றுநோய் மருந்துகளை கண்டறிய முடியுமா என ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் காளான்கள் உணவில் அதிகம் சேர்க்கப்படுகின்றன.

ஆசியாவிலும் காளான்கள், பாரம்பரிய மருந்துகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில காளான்கள் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, ஒட்டுண்ணி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்தியுள்ளன. வான்கோழி வால் எனும் காளான்களில் காணப்படும் பீட்டா-குளுக்கன்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

இதுமட்டுமின்றி அல்சைமர், மூளையில் வீக்கம் போன்ற மூளையுடன் தொடர்புடைய பாதிப்புகளையும் காளான்கள் குறைக்கின்றன. வைட்டமின் டி குறைபாட்டால் வரும் பல்வேறு பாதிப்புகளை குறைக்கிறது. செரிமானம், குடல் ஆரோக்கியத்திற்கும் காளான் உதவுகிறது.

மாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்!

மாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள 14 கி.மீ தொலைவு கிரிவலப் பாதையை... மேலும் பார்க்க

ஓடிடியில் சம்யுக்தா விஜயனின் நீல நிறச் சூரியன்!

சம்யுக்தா விஜயனின் நீல நிறச் சூரியன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இயக்குநர் சம்யுக்தா விஜயன் எழுதி இயக்கி தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் நீல நிறச் சூரியன். ... மேலும் பார்க்க

சக்தித் திருமகன் டீசர்!

நடிகர் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால்,... மேலும் பார்க்க

நடிகை சௌந்தர்யா மரணம் குறித்து சர்ச்சை: கணவர் ரகு விளக்கம்

நடிகை சௌந்தர்யா மரணம் விபத்தல்ல என்றும், திட்டமிட்ட கொலைதான் என்றும் புகார் அளிக்கப்பட்டிருப்பது குறித்து, அவரது கணவர் ரகு விளக்கம் கொடுத்துள்ளார்.நடிகை சௌந்தர்யாவுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை, நட... மேலும் பார்க்க

25 ஆண்டுகளுக்குப் பிறகு.... மீண்டும் நடிக்கும் பூவே உனக்காக சங்கீதா!

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் சங்கீதா நடிக்கிறார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. இவர் ஸ்நேகிதன் ஒரு ப... மேலும் பார்க்க

அதிக கோல்கள் அடித்த பிரேசில் வீரர்..! மெஸ்ஸிக்குப் பிறகு புதிய சாதனை!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து அசத்தியுள்ளார் ரபீனியா. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கடைசி சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. அதில் பார்சிலோனா அணி பென்பிகாவை 3-1 என வென்றது.இந்தப் ப... மேலும் பார்க்க