சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை 3ஆவது முறையாக வென்ற ஷுப்மன் கில்..!
இலங்கையில் துவங்கியது பராசக்தி படப்பிடிப்பு!
சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு இலங்கையில் துவங்கியுள்ளது.
அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கை தலைநகர் கொழும்புவில் துவங்கியுள்ளது.
இதையும் படிக்க: தொன்மக் கதையை இயக்கும் ராஜமௌலி?
இங்கு, மதுரை ரயில் நிலையம் சார்ந்த காட்சிகள் மற்றும் தில்லியில் நடக்கும் காட்சிகள் படமாக்கப்படுவதாகத் தெரிகிறது. இதற்காக, தமிழில் ‘இந்தி வாழ்க’ மற்றும் ‘டெல்லி ரயில் நிலையம்’ என பெயர் பொறிக்கப்பட்ட பழையகால பேருந்து ஒன்றையும் பயன்படுத்தி வருகின்றனர்.
"Sivakarthikeyan Anna rocking it in Colombo! ✨ #Parasakthi shooting in full swing – can’t wait to see the magic on screen! Wishing the team all the best for this epic journey. The second schedule is heating up in Sri Lanka! #Sivakarthikeyan#ParaSakthi#SudhaKongara… pic.twitter.com/AL2PkKW4uI
— TamilCineX (@TamilCineX) March 11, 2025
மேலும், இந்தப் படப்பிடிப்பில் நடிகர் குரு சோமசுந்தரம் இணைந்துள்ளார்.
