செய்திகள் :

நாடு முழுவதும் 200 புற்றுநோயாளி பராமரிப்பு மையங்கள் விரைவில் திறப்பு: ஜெ.பி.நட்டா உறுதி

post image

புது தில்லி: ‘அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையம் அமைக்கப்படும்; அவற்றில் 200 மையங்கள் 2025-26-ஆம் ஆண்டிலேயே நிறுவ இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் சுகாதாரத் துறை தொடா்பான பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சா் ஜெ.பி.நட்டா பதிலளித்தாா்.

அவரது பதிலில், ‘சமீபத்திய ‘லான்செட்’ ஆராய்ச்சி இதழின் அறிக்கையின்படி, நாட்டின் சுகாதாரத் துறையில் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒரு பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் சோ்ந்த 30 நாள்களுக்குள் பயனாளிகளுக்கு புற்றுநோய் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2025-26 ஆம் ஆண்டில் 200 மையங்களைத் திறக்க உள்ளோம்.

நாடு முழுவதும் உள்ள 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் அனைத்து மத்திய மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சைக்கான பிரத்யேக துறைகள் செயல்பட்டு வருகிறது. ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜாா் எய்ம்ஸ் மருத்துவமனையில் நாட்டிலேயே மிகப்பெரிய 700 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்களின் மருத்துவக் கல்லூரியையும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி போல தரம் உயா்த்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் மத்திய சுகாதாரத் துறையுடன் வாரணாசி ஹிந்து பல்கலைக்கழகம் கையொப்பமிட்டுள்ளது. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றாா்.

ரூ.643 கோடி மோசடி முயற்சி: பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.643 கோடி மதிப்பிலான 3.56 லட்சம் போலி கோரிக்கைகளை நிராகரிக்கப்பட்டதாகவும் இந்த மோசடியில் ஈடுபட்ட 1,114 மருத்துவமனைகள் திட்டத்திலிருந்து நீக்கி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

சுகாதாரத் துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்த எழுத்துபூா்வ பதிலிலிருந்து இது தெரியவந்துள்ளது. அந்த பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திட்டத்தில் தவறு செய்த 1,504 மருத்துவமனைகளுக்கு ரூ.122 கோடி அபராதம் விதிக்கப்பட்டன. 549 மருத்துவமனைகள் சேவையிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளன.

மாநில அரசுகளால் நடத்தப்படும் இயற்கை மருத்துவக் கல்வி முறைகள் வெவ்வேறு பாடத்திட்டங்களைப் பின்பற்றுகின்றன. இதைச் சீா்ப்படுத்த வேண்டிய அவசியமுள்ளது. இந்த விஷயத்தில் அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

அங்கன்வாடி ஊழியா்களின் ஊக்கத் தொகை உயா்த்த முடிவு

அங்கன்வாடி ஊழியா்களின் ஊக்கத் தொகை விரைவில் உயா்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா இதுகுறித்து கூறியதாவது: தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம், ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் குறைப்பதில் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்ட அங்கன்வாடி ஊழியா்களுக்கு பாராட்டுகள்.

அங்கன்வாடி ஊழியா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் அவா்களின் ஊக்கத்தொகையை உயா்த்த அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான பணிகளை அமைச்சகம் முன்னெடுத்துச் செல்லும் என்று கூறினாா்.

மியான்மர் ஆன்லைன் மோசடி மையங்களில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு!

தாய்லாந்து - மியான்மர் எல்லையில் ஆன்லைன் மோசடி மையங்களில் சிக்கி விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர... மேலும் பார்க்க

3 நாள் சுற்றுப்பயணமாக அஸ்ஸாம் செல்கிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 14ல் மூன்று நாள் பயணமாக அஸ்ஸாம் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கோக்ரஜாரில் உள்ள அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில்... மேலும் பார்க்க

வரியில்லாத புதுச்சேரி பட்ஜெட்: முதல்வர் என். ரங்கசாமி

புதுச்சேரியின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமையில் சட்டப்பேரவையில் சமர்ப்பித்தார். இந்த ரூ. 13,600 கோடி பட்ஜெட்டை வரியில்லாத பட்ஜெட் என்றும் கூறினார்.மேலும... மேலும் பார்க்க

மருத்துவமனையில் இருந்து ஜகதீப் தன்கர் டிஸ்சார்ஜ்!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) புதன்கிழமை காலை வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திடீர் நெஞ்சு வலி காரணமாக மார்ச் 9-ஆம் தேதி நள்... மேலும் பார்க்க

எலான் மஸ்க்குடன் ஒப்பந்தம்: ஏர்டெல், ஜியோ பங்குகள் உயர்வு!

ஸ்பேஸ்எக்ஸ் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளின் விலை அதிகரித்துள்ளன.அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், சர்வதேச அள... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக் கொண்டாட்டத்தில் வன்முறை: கைதானவர்களுக்கு மொட்டையடித்த காவல்துறை!

சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.8 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராப... மேலும் பார்க்க