செய்திகள் :

Baakiyalakshmi : இனியாவின் காதலால் வெடித்தப் பிரச்னை... துரத்தப்பட்ட செல்வி!

post image

பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா -கோபி விவாகரத்து காட்சிகளுக்குப் பிறகு முழுக்க முழுக்க பாக்யா வீட்டில் நடக்கும் சம்பவங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அம்மாவின் பேச்சைக் கேட்டு கோபி பாக்யாவுடன் மீண்டும் வாழ்க்கையை தொடங்க நினைத்து கடிதம் ஒன்றை எழுதி பிறந்தநாள் பரிசாகக் கொடுக்கிறார்.

ஆனால் அந்தப் பரிசை பாக்யா பிரித்துக்கூட பார்க்கவில்லை. பாக்யா தனது பிறந்தநாளின் போதே தெளிவாகச் சொல்லி விடுகிறார். அவருக்கு கோபியுடன் மீண்டும் வாழும் எண்ணமே இல்லை என்று அனைவர் முன்னிலையிலும் சொல்லிவிடுகிறார்.

Baakiyalakshmi

ஆனாலும் கோபி பாக்யாவின் செயல்களைப் பார்த்து வியக்கிறார். எப்படி நேர்த்தியாக ஒவ்வொரு வேலையையும் பார்த்துப் பார்த்து செய்கிறார் என வியக்கிறார். பாக்யாவை மகிழ்ச்சிப்படுத்த எழில் மற்றும் செழியனை குடும்பத்தோடு வீட்டிற்கு வரவழைக்கிறார். ஆனால் அது பாக்யாவுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துகிறது. இதனால் பாக்யா பழையபடி கிச்சனே கதி எனக் கிடக்கிறார்.

இதனிடையே பாக்யாவின் மகள் இனியா, செல்வியின் மகன் ஆகாஷை காதலிக்கிறார். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்கின்றனர். இனியா செல்வி இல்லாத போது வீட்டிற்கே சென்று ஆகாஷை சந்திக்கிறார்.

ஐஏஎஸ் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற முனைப்பில் சின்சியராகப் படித்து வரும் ஆகாஷ் மீது பாக்யா வீட்டில் அனைவருக்குமே நல்ல அபிப்ராயம் உள்ளது. இனியா தன் பாக்கெட் மணியை வைத்து ஆகாஷுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுக்கிறார்.

Baakiyalakshmi

ஆகாஷ்-இனியா பேசிக் கொள்வதை செல்வி கவனித்து ஆகாஷை கண்டிக்கிறார். நமக்கு சோறு போடுற வீடு அது, அவங்களுக்கு துரோகம் பண்ணக் கூடாது என செல்வி சொல்கிறார். இத்யனால் ஆகாஷ் ஒருவித குற்றவுணர்ச்சியோடு இனியாவுடன் பழகுகிறார். ஆனால் இனியா பெரிதாக பயமின்றி ஆகாஷை அடிக்கடி சந்திக்க வர சொல்கிறார்.

சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கோபி காஃபி ஷாப்பில் இனியா-ஆகாஷ் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்க்கிறார். அவர்களின் காதல் விவகாரம் வெளியே வருகிறது. கோபி வீட்டில் அனைவர் முன்னிலையிலும் பாக்யாவை கேள்விக் கேட்கிறார். நம்ம வீட்ல பாத்திரம் தேய்க்கிறவங்க பையன தான் இனியா காதலிக்குறா என கோபப்படுகிறார். அந்த சமயம் பார்த்து அங்கு வரும் செல்வியை செழியனும் ஈஸ்வரியும் சேர்ந்து அவமானப்படுத்தி வீட்டை வீட்டு வெளியே அனுப்புகின்றனர். இதற்கு பாக்யா எப்படி ரியாக்ட் செய்வார் என்பது அடுத்து வரும் எபிசோடுகளில் தெரியும்.

Siragadika Aasai: `சிறகடிக்க ஆசை மூலமாக பலரும் என்னை திட்டுறாங்க; ஆனா அதுதான் பாராட்டு' - சுஜாதா

`ஜில்லா விட்டு ஜில்லா வந்து' பாடல் மூலமாக பட்டிதொட்டியெங்கும் பரிச்சயமானவர் `ஈசன்' சுஜாதா. இந்தப் பாடலே இவரின் பெயருக்கு ஒரு அடையாளத்தையும் தேடிக் கொடுத்தது. நடன இயக்குநராக பல முன்னணி கதாநாயகன்களுடன் ... மேலும் பார்க்க

Siragadikka aasai : பெரிய பிரச்னையில் சிக்கிய மீனா; முத்து எப்படி சமாளிப்பார்?

சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்த்திராதப் பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. பரசுவின் மகள் திருமணம், மனோஜ் சந்தித்த விபத்து, புதிதாக இரண்டு காதல் டிராக் என கதை களைகட்டுகிறது. தற்போது வெளியாகி... மேலும் பார்க்க

`உங்க நண்பர் சஞ்சீவுடன் என்னதான் பிரச்னை?’ - நடிகர் ஶ்ரீகுமார் சொல்வது என்ன?

விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிற 'தனம்' தொடரில் கமிட் ஆகி இருக்கிறார் நடிகர் ஶ்ரீகுமார். பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன், நடிகை ஷமிதாவின் கணவர் என இவருக்கு வேறு சில அடையாளங... மேலும் பார்க்க

`நிம்மதியா நடிக்கக்கூட முடியலை, பத்து நாளா மன உளைச்சல்ல இருக்கேன்’ - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஸ்டாலின்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சீசனில் மூர்த்தியாக வந்து சீரியல் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் ஸ்டாலின். முதல் சீசன் ஹிட் ஆனதால் தற்போது இரண்டாவது சீசனிலும்தொடர்கிறார்.இந்நிலையில் சில தினங்களுக்கு ... மேலும் பார்க்க

Jodi Are You Ready 2: "எனக்கும் ரியோவுக்கும் இடையேயான ஃபன் ஸ்கிரிஃப்ட் கிடையாது'' - ஸ்ரீ தேவி பேட்டி

`ஜோடி ஆர் யூ ரெடி' நிகழ்ச்சியின் சீசன் 2 விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.முதலாவது சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரம்பா, ஸ்ரீ தேவி, சாண்டி, லைலா ஆகியோர் நடுவர்களாகப் பங்கு வகித்து வரு... மேலும் பார்க்க