Jodi Are You Ready 2: "எனக்கும் ரியோவுக்கும் இடையேயான ஃபன் ஸ்கிரிஃப்ட் கிடையாது'' - ஸ்ரீ தேவி பேட்டி
`ஜோடி ஆர் யூ ரெடி' நிகழ்ச்சியின் சீசன் 2 விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
முதலாவது சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரம்பா, ஸ்ரீ தேவி, சாண்டி, லைலா ஆகியோர் நடுவர்களாகப் பங்கு வகித்து வருகிறார்கள். 'ஜோடி ஆர் யூ ரெடி' செட்டுக்கு விசிட் அடித்து நடிகை ஸ்ரீ தேவியுடன் ஒரு குட்டி சாட் போட்டோம்.
நடிகை ஸ்ரீ தேவி பேசுகையில், "இரண்டாவது சீசனோட பயணம் சூப்பராக போயிட்டு இருக்கு. முக்கியமாக, இரண்டாவது சீசன்ல ஒரு பங்காக இருக்கிறது மகிழ்ச்சியைக் கொடுக்குது. இப்போவே நிகழ்ச்சி சுவாரஸ்யாமாகப் போயிட்டு இருக்கு. தொடக்க எபிசோடுகளிலேயே போட்டியாளர்கள் அதிரடியான பெர்பாமென்ஸ் கொடுத்துட்டு இருக்காங்க. ஒவ்வொரு போட்டியாளர்கிட்டையும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கு. ரொம்பவே வலுவான ஜோடிகள் இந்த சீசன்ல இருக்காங்க. எல்லோருமே வெற்றிக் கோப்பையைத் தூக்குறதுக்கு தகுதியான ஜோடிகளாகத்தான் இருக்காங்க.

ஒவ்வொருக்கும் தனித்துவமான ஸ்டைலும் இருக்கு. எல்லோருமே அந்த வழக்கமான ஸ்டைல் இல்லாமல் வித்தியாசமான உடல்மொழியோடதான் நடனமாடுறாங்க" என்றவர் தனக்கும் நடனத்துக்கும் இருக்கும் தொடர்புக் குறித்து விவரிக்க தொடங்கினார்.
அவர், "யாருக்குத்தான் டான்ஸ் பிடிக்காது. எல்லோருக்குமே என்ஜாய் பண்ணி டான்ஸ் பண்றது பிடிக்கும். எனக்கு மியூசிக் கேட்டாலே டான்ஸ் வந்திடும். டான்ஸ் ஒரு ஃபன். அதை ரொம்பவே என்ஜாய் பண்ணி பண்ணணும். குட் டான்ஸர், பேட் டான்ஸர் அப்படிங்கிற விஷயத்தையெல்லாம் மீறி ரொம்பவே என்ஜாய் பண்ணி டான்ஸ் பண்ணனும்.
அதை நீங்க சரியாகப் பண்ணலைனாலும் பரவாயில்ல. ஒரு விஷயத்தை நம்ம என்ஜாய் பண்ணி பண்ணும்போது அது சரியான வடிவத்துல நம்மகிட்ட வந்து சேரும். முதல் சீசன்ல பல போட்டியாளர்களும் தங்களை நிரூபிச்சிட்டு போயிட்டாங்க. அதனைத் தொடர்ந்து இந்த இரண்டாவது சீசன்ல வர்றவங்களுக்கு கொஞ்சம் பிரஷர் இருக்கும். ஆனால், அதையெல்லாம் எடுத்துக்காமல் ரொம்பவே துடிப்போட தயாராகி வர்றாங்க. இப்போதான் இரண்டாவது சீசன் தொடங்கியிருக்கு. ஆனா, இப்போவே ஃபைனல் கட்டத்துக்கு வந்த மாதிரி அர்ப்பணிப்போட தயாராகி மேடைக்கு வர்றாங்க. எனக்கும் தொகுப்பாளர் ரியோவுக்கும் இடையேயான ஃபன் எதுவுமே நடிப்பு கிடையாது. அது எதுவுமே ஸ்கிரிப்ட் கிடையாது.

டென்ஷன் ஜோடிகளுக்குத்தான் இருக்கும். அவங்க டான்ஸ் பண்றதைப் பற்றி யோசிச்சிட்டே இருப்பாங்க. ஆனால், நாங்களெல்லாம் ரொம்ப்வே ஜாலியாக இருப்போம். ஒரு பெர்பாமென்ஸ் சுமாராக இருக்கும்போது அதுக்கான கமென்ட்ஸ் அவங்ககிட்ட சொல்லும்போது அவங்களுக்கு அது எந்தளவுக்குக் கஷ்டமாக இருக்குமோ அதைவிட கஷ்டம் நடுவராக இருந்து அந்த கமென்ட்டை சொல்றது. ஆனால், அதை நேர்மறையாகச் சொல்லணும். சில சமயங்கள்ல கமென்ட்ஸை சாஃப்ட்டாக சொல்லுவோம். போட்டி அதிகமாகி கடைசிக் கட்டத்தை நெருங்கும்போது அவங்களோட தவறைத் திருத்திகிறதுக்காக நேரடியாகச் சொல்லுவோம்" எனக் கூறி முடித்துக் கொண்டார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel