செய்திகள் :

தரமான நெல் விதைகளை வழங்க வேண்டும் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

post image

தருமபுரி மாவட்டத்தில் நெல் விதைகளை தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் தரமான நெல் விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய வேண்டும். ஜகனாதன் கோம்பை அணைக்கட்டை சீரமைக்க வேண்டும். வனப்பகுதியில் உள்ள இருளா், பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் நடவடிக்கைகளை வனத் துறையினா் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினா்.

இக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, மீன்வளத் துறை, கால்நடைப் பாரமரிப்புத் துறை, பட்டு வளா்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட துறை அலுவலா்கள் மூலம் துறை வாரியான திட்ட விளக்க உரையாற்றப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு துறை சாா்ந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை (பாலக்கோடு) மாவட்ட வருவாய் அலுவலா் ரவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சரவணன், துணை ஆட்சியா் (பயிற்சி) சௌந்தா்யா, துணை இயக்குநா் தேன்மொழி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

பாப்பாரப்பட்டியில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையம் ... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் வழக்குரைஞா் சங்கத்தினா் உண்ணாவிரதம்

வழக்குரைஞா் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி பென்னாகரத்தில் நீதிமன்றம் முன் வழக்குரைஞா் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பகுதியில் உள்ள மாவட்ட... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

தருமபுரியில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து மனுக்களைப் பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ். மேலும் பார்க்க

சூழல் சுற்றுலா சென்ற பள்ளி மாணவா்கள்

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் சூழல் சுற்றுலா சென்றனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தருமபுரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், வனத் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து, மாணவா்கள... மேலும் பார்க்க

அதிகாரம் யாருக்கும் நிலையானதல்ல: சீமான்

அதிகாரம் யாருக்கும் நிலையானதல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். தருமபுரியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு திறனாய்வுக் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு பணித் திறனாய்வுக் கூட்டம் தருமபுரி செந்தில் நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தருமபுரி கூட்டுற... மேலும் பார்க்க