முதல்வர் பிறந்தநாள்: தமிழில் கையெழுத்திட்டு ஆளுநர் வாழ்த்துக் கடிதம்!
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வக்ஃப் வாரியங்களை முடக்கி, வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்கும் வகையில் இச்சட்டத் திருத்தம் உள்ளதாகவும், இதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், திருவாரூா் ரயில் நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மத்திய அரசைக் கண்டித்தும், வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் எம். முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ. குத்புதீன், தமுமுக மாவட்டச் செயலாளா் எச். நவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் ஐ.எம். பாதுஷா, மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மதிமுக கொள்கைப் பரப்பு செயலாளா் சீனிவாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.