செய்திகள் :

முதல்வர் பிறந்தநாள்: தமிழில் கையெழுத்திட்டு ஆளுநர் வாழ்த்துக் கடிதம்!

post image

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் கையொப்பமிட்டு பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 1) தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இதையும் படிக்க | முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை!

தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் கையொப்பமிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

"தாங்கள் இன்று தங்களுடைய 72-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின்கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.

மேலும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்நாளில் தங்களை வாழ்த்துகிறேன்" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் ஆர்.என். ரவி அந்த வாழ்த்து கடிதத்தில் தமிழில் கையொப்பமிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பெரியார் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் வருகை?

மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் உதய நாளையொட்டி, தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் வருகைதர வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் உதய நாளாக ஆண்டுதோ... மேலும் பார்க்க

பிப்ரவரியில் சென்னை மெட்ரோ ரயிலில் 86.65 லட்சம் பேர் பயணம்!

கடந்த பிப்ரவரி மாதத்தில் 86.65 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெட்ரோ ரயில் நிறு... மேலும் பார்க்க

ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, தமிழைக் காப்பேன்: முதல்வர்

ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, தமிழைக் காப்பேன் என்று திமுக கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தனது கட்சியினருக்கு கடி... மேலும் பார்க்க

பெரியார் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை பெரியார் திடலில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 1) தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி இன்று கால... மேலும் பார்க்க

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா!

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா ‘ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவா் சமுதாயமும் அப்பா என்று அன்போடு அழைக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று எழுதப்பட்ட கேக்குகளை 72 ... மேலும் பார்க்க

சரித்திரம் போற்றும் சாதனைகள்!

‘பள்ளிகளில் காலை உணவு’, ‘நான் முதல்வன்’ திட்டப் பாணியில் மாணவா்களுக்கு உயா்கல்வி, ‘கலைஞா் வீடு கட்டும் திட்டம்’ பாணியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி ஆகிய மூன்று திட்டங்களைப் பின்பற்றியே பிரிட்டனில் ... மேலும் பார்க்க