தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தில்லியில் 'வைகை', 'பொதிகை' என்ற பெயரில் தமிழ்நாடு இல்லம் உள்ளது. இந்நிலையில் இன்று(மார்ச் 1) காலை 'பொதிகை' தமிழ்நாடு இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையும் படிக்க | 'டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது'- ஸெலென்ஸ்கி
இதையடுத்து தமிழ்நாடு இல்லத்தில் இருந்தவர்களை வெளியேற்றி மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.