செய்திகள் :

புனே பாலியல் வழக்கு: சிக்க வைத்த ஒரு கிளாஸ் தண்ணீர்; களமிறங்கிய கிராமம்; குற்றவாளி சிக்கியது எப்படி?

post image

புனேயில் கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலையில் பேருந்திற்கு டெப்போவில் காத்து நின்ற மருத்துவமனை பெண் ஊழியர் பேருந்திற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்பெண்ணிடம் தத்தாத்ரேயா ராமதாஸ் என்பவர் அப்பெண் செல்ல வேண்டிய பஸ் வேறு இடத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதாகக் கூறி, பேருந்திற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இருட்டுக்குள் தப்பிச் சென்றுவிட்டார்.

தத்தாத்ரேயாவின் புகைப்படம் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸார் தெரிவித்திருந்தனர். அவரைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தத்தாத்ரேயாவின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது புனேயிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவரது சொந்த ஊரான குனத் என்ற இடத்திலிருப்பது தெரிய வந்தது.

தத்தாத்ரேயா
தத்தாத்ரேயா

உடனே 100 சிறப்பு போலீஸார் மோப்ப நாய்கள், ட்ரோன்கள் துணையோடு அங்குச் சென்றனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் வந்தவுடன் கிராமத்து மக்களும் அதிர்ச்சியடைந்தனர். கிராமத்து மக்கள் 500 பேர் போலீஸாருடன் சேர்ந்து கிராமம் முழுக்க இருக்கும் கரும்பு தோட்டத்தில் தேடினர். இரவில் டார்ச் லைட் துணையோடு 100 போலீஸார் உட்பட 600 பேர் சல்லடைப் போட்டுத் தேடினர். இறுதியில் அதிகாலை 1.30 மணிக்குக் கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த தத்தாத்ரேயாவைக் கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்த போது தலைமறைவாக இருந்த காலத்தில் சாப்பிடச் சாப்பாடு இல்லாமல் கரும்பு மற்றும் தக்காளியைச் சாப்பிட்டு வாழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார். அதோடு போலீஸாரிடம் பிடிபடாமல் இருக்க மூன்று முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பதுங்கி இருந்த தோட்டத்திலிருந்த மரத்தில் தற்கொலைக்கு முயன்றபோது கயிறு அறுந்துவிட்டதாக தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

இது குறித்து புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் கூறுகையில், "தத்தாதரேயாவைக் கண்டுபிடிக்க உதவிய குனத் கிராம மக்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். 500 அதிகாரிகள் 3 நாட்கள் இரவு, பகலாக வேலை செய்து தத்தாத்ரேயாவை அதிகாலை 1.30 மணிக்குக் கைது செய்துள்ளனர். இந்த தேடுதலில் கிராம மக்கள் 500 பேர் மிகவும் ஆர்வத்தோடு பங்கெடுத்தனர். தத்தாத்ரேயாவின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது. அதோடு மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டது. தத்தாத்ரேயா குறித்து தகவல் கொடுத்தால் ஒரு லட்சம் கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். தத்தாத்ரேயா தனது கிராமத்தில் உள்ள ஒருவர் வீட்டிற்குச் சென்று தண்ணீர் குடித்துள்ளார்.

அந்த நபர் எங்களுக்கு உடனே போன் செய்து தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்தே அங்குத் தேடி தத்தாத்ரேயாவைக் கைது செய்தோம். எனவே தத்தாத்ரேயாவிற்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்த நபருக்கு அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம் சன்மானம் வழங்கப்படும். இக்காரியத்தில் ஒட்டுமொத்த கிராமமும் எங்களுக்கு உதவி செய்தது. சிலர் தங்களது இரு சக்கர வாகனத்தைக் கொடுத்து உதவினர். அவர்களும் இரு சக்கர வாகனத்தில் சென்று தேடினர்'' என்று தெரிவித்தார்.

rape case
rape case

பொருளாதார ரீதியில் மிகவும் பலவீனமாக இருக்கும் தத்தாத்ரேயா மீது 6 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அவரது மனைவி ஒரு விளையாட்டு வீராங்கனையாகும்.

பகல் முழுவதும் கிராமத்திலிருந்துவிட்டு இரவில் புனே வருவதைத் தத்தாத்ரேயா வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பது அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில் தெரிய வந்தது. தத்தாத்ரேயாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், பேருந்து நிலையத்தில் இருவரும் பேசி பழகிக்கொண்டதால் இருவரும் விருப்பப்பட்டுத்தான் பேருந்திற்குள் உறவு வைத்துக்கொண்டனர். இது பாலியல் வன்கொடுமை கிடையாது என்று வாதிட்டனர். ஆனால் தத்தாத்ரேயாவை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

Vikatan Weekly Quiz: `தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சை டு சாம்பியன்ஸ் டிராபி' - இந்த வார கேள்விகள் இதோ..!

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, மகா கும்பமேளா, ரஷ்யா - உக்ரைன் போர் மூன்றாண்டுகள் நிறைவு, சாம்பியன்ஸ் டிராபி தொடர் என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இ... மேலும் பார்க்க

`சட்டம் ஆண்களையும் பாதுகாக்க வேண்டும்’ - மனைவி குறித்து வீடியோ வெளியிட்டு TCS ஊழியர் விபரீத முடிவு

மனைவியின் துன்புறுத்தலால் கணவன் தற்கொலை செய்து கொள்வது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. சமீபத்தில் பெங்களூருவில் அதுல் சுபாஷ் என்ற எஞ்சினியர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்... மேலும் பார்க்க

`எதுவுமே செய்யாமல் நாளொன்றுக்கு ரூ.35 லட்சம் வருமானம் ' - சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்ஸர் சொல்வெதென்ன?

சீனாவைச் சேர்ந்த சோசியல் மீடியா இன்ஃப்ளேன்ஸர் ஒருவர், தான் சும்மா படுத்துக்கொண்டு வருமானம் ஈட்டுவதாக வெளிப்படையாகக் கூறியதையடுத்து, கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். ஒரே நாளில் இவர் இந்திய மதி... மேலும் பார்க்க

சீனா - தைவான் விவகாரம் : `நான் கருத்து தெரிவிக்க மாட்டேன்' - நழுவிய ட்ரம்ப்

ரஷ்யாவிடமிருந்து (சோவியத் யூனியன்) பிரிந்து சென்ற உக்ரைன் போல சீனாவிடமிருந்து பிரிந்து சென்றது தைவான். ஆனால், இன்றளவும் உக்ரைனை ரஷ்யா சொந்தம் கொண்டாடுவதுபோல தைவனை சீனா சொந்தம்கொண்டாடுகிறது. இந்த விவகா... மேலும் பார்க்க

திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும்; இல்லைன்னா பணிநீக்கம் - சர்ச்சை கண்டிஷனை திரும்ப பெற்ற நிறுவனம்

டிசம்பர் மாதத்துக்குள் திருமணம் ஆகாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக கூறிய ஒரு சீன நிறுவனம், அந்த ரூல்ஸை திரும்ப பெற்றதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஷாண்டாங்கில் உள்ள `ஷு... மேலும் பார்க்க

Kumbh Mela: போனை ஆற்றில் முக்கிய மனைவி; வீடியோ காலில் புனித நீராடிய கணவர்; வைரலாகும் உபி பெண்!

உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவிற்குப் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். சில நேரங்களில் பெண்கள் அல்லது ஆண்கள் தங்களது கணவர் அல்லது மனைவியை விட்டுவிட்டு, தான் மட்டும் செல்வதுண்டு.... மேலும் பார்க்க