செய்திகள் :

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு: 8 ஆக உயர்ந்த பலி!

post image

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் சார்பு பாடசாலை பகுதியில் உள்ள ஒரு மசூதியில் நேற்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் மசூதியில் வழிபாடு நடத்திய 8 பேர் பலியாகியுள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரமலான் நோன்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் மசூதியில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை என்று காவல் அதிகாரிகள் கூறினார்.

இந்தியா: மொபைல் போன் ஏற்றுமதி 40% அதிகரிக்க வாய்ப்பு

இந்தியாவில் மொபைல் போன்களின் ஏற்றுமதி அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகளவில் அதிக மக்கள்தொகையில் முதலிடம் கொண்டுள்ள இந்தியாவில் மொபைல் போன்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அத... மேலும் பார்க்க

இலங்கை முன்னாள் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை தலைநகர் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் மோடி சந்தித்தார்.இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, "என்எக்ஸ... மேலும் பார்க்க

ஹிமாசலில் கனமழை, பனிப்பொழிவு: 538 சாலைகள் மூடல்!

ஹிமாசல் பிரதேசத்தில் மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 538 சாலைகள் மூடப்பட்டதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ஹிமாசல் பிரதேசத்தில் மழை, பனிப்பொழிவு காரணமாக பல மாவட்டங்கள் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

மணிப்பூரில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும்: அமித் ஷா!

மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2023 மே முதல் இன கலவரத்தால் பாதிக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம், கிஸ்டாரம் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக க... மேலும் பார்க்க

திரிபுராவில் 100 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது

திரிபுராவில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். திரிபுரா மாநிலத்தில் ரகசிய தகவல் வந்ததையடுத்து பிஎஸ்எஃப் மற்றும் சுங்கத் துறை இணைந்து கூட்டுக் குழு அமைக்கப்பட்ட... மேலும் பார்க்க