Tamannaah: கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு; தமன்னாவிற்குத் தொடர்பா? விசாரிக்க புதுச்சேரி போலீஸ் திட்டம்
நடிகை தமன்னா பாடியா கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.
ரூ.2.4 கோடி கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக அவரிடம் பாண்டிச்சேரி போலீஸார் விசாரிக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. ஆனால் அதனை தமன்னா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் நான் ஈடுபடுவதாகவும், அதில் மோசடி செய்துவிட்டதாகவும் வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது. இது போன்ற தவறான செய்தியை வெளியிடவேண்டாம் என்று மீடியா நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக வெளியாகி இருக்கும் செய்தி முற்றிலும் பொய்யானது. அச்செய்திக்கு எதிராக நான் சட்டப்பூர்வமா நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

பாண்டிச்சேரியைச் சேர்ந்த அசோகன் என்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் கிரிப்டோகரன்சியில் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் அதனை ஏமாற்றிவிட்டதாக போலீஸில் புகார் செய்துள்ளார். அசோகன் தனது நண்பர்கள் சிலரிடம் பேசி அவர்களையும் 1.4 கோடி அளவுக்கு கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
கோயம்புத்தூர் கம்பெனியின் தொடக்க விழாவில் நடிகை தமன்னா கலந்து கொண்டார். அதோடு அக்கம்பெனியின் மகாபலிபுரம் நிகழ்ச்சியிலும் தமன்னாவும், நடிகை காஜோலும் கலந்து கொண்டனர். மகாபலிபுரம் நிகழ்ச்சியில் 100 முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் 1 கோடி வரையிலான கார்கள் கிப்டாக கொடுக்கப்பட்டது.
எனவே நிகழ்ச்சியின் தமன்னாவும், காஜோலும் விளம்பரத் தூதர்களாகக் கலந்து கொண்டார்களா அல்லது அவர்களும் கோயம்புத்தூர் கம்பெனியோடு சேர்ந்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டனரா என்பது குறித்து விளக்கம் கேட்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். காஜோல் இப்புகார் குறித்து இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel