ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தங்க மோதிரம் பரிசளித்த அஜித் ரசிகர்கள்!
குட் பேட் அக்லி டீசருக்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் ரசிகர்கள் தங்க மோதிரத்தைப் பரிசளித்துள்ளனர்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் நேற்று (பிப். 28) இரவு வெளியானது.
இந்த டீசரில் தீனா, பில்லா தோற்றங்களில் அஜித் காட்சியளித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இதனால், எதிர்பார்த்ததைவிட குட் பேட் அக்லி டீசர் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது.
இதையும் படிக்க: 2.5 கோடி பார்வைகளைக் கடந்த குட் பேட் அக்லி டீசர்!
மேலும், யூடியூபில் 3 கோடி (30 மில்லியன்) பார்வைகளை நெருங்கவுள்ளது. மங்காத்தாவுக்குப் பின் அஜித் ரசிகர்களுக்கான படமாக இது உருவாகியிருப்பதால் படம் வணிக ரீதியாகவும் சில சாதனைகளைச் செய்யும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, மதுரையிலிருந்து சென்னையிலுள்ள பிரபல திரையரங்கில் டீசர் வெளியீட்டைக் காண வந்த அஜித் ரசிகர்கள் டீசர் வெளியீட்டுக்குப் பின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 2 பவுன் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியிருக்கின்றனர்.
2Poun Gold Ring Gift for fan boy @Adhikravi For GBU Teaser
— Joyston (@Joymdu15) February 28, 2025
Madurai Ajith Fans #GoodbaduglyTeaser#Goodbadugly#Ajithkumarpic.twitter.com/cFyOo58CYE
தாங்கள் எப்படியெல்லாம் நடிகர் அஜித்தைக் காண விரும்பினோமோ அப்படி குட் பேட் அக்லி படத்தை உருவாக்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.