2 கோடி பார்வைகளைக் கடந்த குட் பேட் அக்லி டீசர்!
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் டீசர் 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் நேற்று(பிப். 28) இரவு வெளியானது.
இந்த டீசர் அஜித் குமாரின் முந்தைய கல்ட் கிளாசிக் படங்களைப் பிரதிபலிப்பதாக இருந்ததோடு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையையும் பெற்றது.
குட் பேட் அக்லி படத்தின் டீசர் 16 மணி நேரத்தில் 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. மேலுஜ், 7 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: எம்புரான் பட டப்பிங் பணியில் மஞ்சு வாரியர்!
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம், பொங்கல் திருநாளன்று வெளியிடத் திட்டமிருந்த நிலையில், அதே சமயத்தில் விடாமுயற்சியும் வெளியானதால், குட் பேட் அக்லியின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.