செய்திகள் :

துருவ நட்சத்திரம்: வெளியீட்டு தேதி அறிவித்த இசையமைப்பாளர்

post image

நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீடு குறித்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி, 7 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவராமல் கிடப்பில் போடப்பட்ட திரைப்படமான துருவ நட்சத்திரத்தை ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிருப்பதாக, படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார். தனது இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பின்போது, துருவ நட்சத்திரம் படம் குறித்த அறிவிப்பையும் ஹாரிஸ் ஜெயராஜ் பகிர்ந்து கொண்டார்.

2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம், நிதி பிரச்னை உள்பட பல பிரச்னைகளால் நீண்ட காலமாக வெளிவராமல் தள்ளிப்போனது. இருந்தபோதிலும், 2023-ல் நவம்பர் மாதம் துருவ நட்சத்திரம் வெளியிடப்படவிருந்த நிலையில், படம் வெளியிடுவது தள்ளிப்போவதாக வெளியீட்டுக்கு முந்தைய நாளில் இயக்குநர் கௌதம் மேனன் அறிவித்தார்.

இந்தப் படத்தில் பார்த்திபன், விநாயகன், சிம்ரன், ராதிகா, ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க:ரெட் டிராகனாக அஜித்... குட் பேட் அக்லி டீசர்!

எம்புரான் பட டப்பிங் பணியில் மஞ்சு வாரியர்!

எம்புரான் படத்தின் டப்பிங் பணியில் நடிகை மஞ்சு வாரியர் ஈடுபட்டுள்ளார். நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி டீசர் வெளியானது!

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் 94 வினாடி கொண்ட டீசர் வெளியானது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகி, ர... மேலும் பார்க்க

கூலி படத்தில் நடிக்கிறேனா? சந்தீப் கிஷன் விளக்கம்!

கூலி படத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்க... மேலும் பார்க்க

புதிதாய் தொழில் தொடங்கிய சின்ன திரை ஜோடி!

மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா தம்பதியினர் புதிய தொழில் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.வானொலியில் தொகுப்பாளராக இருந்து சின்ன திரையில் அறிமுகமானவர் மிர்ச்சி செந்தில். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா... மேலும் பார்க்க

கணவரை விவாகரத்து செய்த வாரிசு பட நடிகை!

வாரிசு படத்தின் மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.சிறுவயதில் இருந்தே மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த சம்யுக்தா, நடிகை ராதிகா இயக்கிய சந்திரகுமாரி த... மேலும் பார்க்க

அவதூறு வழக்கு: 5 ஆண்டுகளுக்குப் பின் சமரசமான கங்கனா ரணாவத் - ஜாவேத் அக்தர்!

கங்கனா ரணாவத், ஜாவேத் அக்தர் இருவரும் தங்களது அவதூறு வழக்கில் சமரசம் ஏற்பட்டு இந்த வழக்கினை முடித்துக் கொள்வதாகக் கூறியுள்ளனர். நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் இயக்கத்தில் சமீபத்தில் எமர்ஜென்சி என்... மேலும் பார்க்க