உ.பி.: சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு
உ.பி.யின் ஜான்பூரில் சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் நகர் கோட்வாலி பகுதியில் வாய்க்காலில் வீசப்பட்ட சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.
தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், துர்நாற்றம் வீசிய சடலத்தை கண்டெடுத்தனர்.
அப்போது அதில் பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்
இதுகுறித்து காவல் அதிகாரி கவுஸ்துப் கூறுகையில், சடலத்தை உடற்கூராய்வுக்காக அனுப்பியுள்ளோம். இறந்த பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும்.
அவரது அடையாளத்தை கண்டறியும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார்.