செய்திகள் :

விசாரணைக்கு ஆஜரானார் சீமான்!

post image

நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆஜரானார்.

வழக்கு தொடர்பாக காவல் துறை 2 முறை சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது சீமான் ஆஜராகி உள்ளார். காவல் நிலையம் வரை சீமானின் காரை அனுமதிக்க வேண்டும் என காவல் துறையுடன் தொடண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமானின் காரை மட்டும் அனுமதித்த காவல்துறை, மற்ற கார்களை தடுத்து நிறுத்தினர்.

இருப்பினும், வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே கூடியுள்ள நாதகவினர் தடுப்புகளை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் நாதகவினர்-காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விசாரணைக்கு ஆஜராகியுள்ள சீமானிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் பெற காவல் துறை திட்டமிட்டுள்ளது.

சீமான் ஆஜராவதையொட்டி வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாதகவினர் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்து அழைத்துச் செல்ல பேருந்துகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வளசரவாக்கம் காவல் நிலையம் உள்ள ஸ்ரீதேவி குப்பம் சாலையில் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையை நிறைவடைந்த பின் கைது நடவடிக்கைகளும் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வளசரவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: 1,000 பேருக்கு பிரியாணி

முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தாளையொட்டி 1,000 பேருக்கு பிரியாணியும், 500 பெண்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டன. தொழிலாளா் முன்னேற்றச் சங்க (தொமுச) பேரவை சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவத... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து இருப்பதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா். தனது பிறந்த தினத்தையொட்டி, தமிழ் மொழி பாதுகாப்பு, தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கருத்துகளை பதிவி... மேலும் பார்க்க

காவல் துறைக்கு அழுத்தம் தருகிறது அரசு: சீமான்

காவல் துறை விசாரணையில் புதிய கேள்விகள் ஏதும் இல்லை என்றும் பழைய கேள்விகளே கேட்கப்பட்டதாகவும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காவல் துறையினர் மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழ... மேலும் பார்க்க

கல்வியில் தமிழ்நாடு முன்னிலை; சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு: முதல்வர்

மும்மொழி கொள்கைக்கு எதிரான அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுகவும் பங்கேற்பவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாளையொட்டி, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ ம... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாற்றம்!

மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை ஆட்சியரு... மேலும் பார்க்க

மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ள் தளப் பதிவில், சீர்காழியில், மூன்றரை... மேலும் பார்க்க