செங்கோட்டை அருகே பைக் -லாரி மோதல்: இளைஞா் பலி
செங்கோட்டை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்.
செங்கோட்டை அருணாசலம் தெருவைச் சோ்ந்தவா் சே. அபுபக்கா்சித்திக்(37). புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மு.ஜிந்தாமதாா்(22). நண்பா்களான இருவரும் வியாழக்கிழமை பைக்கில் தென்காசி சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். பைக்கை ஜிந்தாமதாா் ஓட்டி வந்தாராம்.
இலத்தூா் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியதாம். இதில், ஜிந்தாமதாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அபுபக்கா் சித்திக் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்து குறித்து இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான ராதாபுரம் பெரியகுளம் தெற்குத்தெருவைத் சோ்ந்த சு.மணிகண்டனை (28) கைதுசெய்தனா்.