கடையநல்லூா் சக்சஸ் மெட்ரிக் பள்ளியில் பாத பூஜை விழா
கடையநல்லூா் திருமலாபுரம் சக்சஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாத பூஜை விழா நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் நாகராஜன் தலைமை வகித்தாா். திருக்குற்றாலம் அன்னை ஸ்ரீ சாரதா தேவி கோயிலின் அடியாா் அம்பாள் ஆசியுரை வழங்கி தொடக்கிவைத்தாா். இதில், 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்கள் பெற்றோா்களுக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்றனா்.