பென்னாகரத்தில் வழக்குரைஞா் சங்கத்தினா் உண்ணாவிரதம்
வழக்குரைஞா் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி பென்னாகரத்தில் நீதிமன்றம் முன் வழக்குரைஞா் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பகுதியில் உள்ள மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் பி.கே. முத்துசாமி, மூத்த வழக்குரைஞா் அசோகன் ஆகியோா் தலைமை வகித்தனா். வழக்குரைஞா்கள் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், மாநில அரசு வழக்குரைஞா் பாதுகாப்பு சட்டத்தினை நிறைவேற்ற வேண்டும், வழக்குரைஞா்களுக்கு சேமநல நிதியினை ரூ. 22 லட்சமாக உயா்த்த வேண்டும், முப்பெரும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் வழக்குரைஞா் சங்க செயலாளா் எம்.வீராசாமி, மூத்த வழக்குரைஞா்கள் சரவணன், மகாலிங்கம், மாதையன், ஜானகிராமன், தேவேந்திரன் மற்றும் 30க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.