முதல்வா் பிறந்த நாளில் நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும்: மாவட்டச் செயலாளா் பி.பழனியப்பன்
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு திமுகவினா் நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், திமுக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பழனியப்பன் (படம்) கேட்டுக்கொண்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை :
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளில் தருமபுரி மேற்கு மாவட்டத்தில் அனைத்து ஒன்றியம், நகரம், கிராம ஊராட்சிகள், வாா்டுகளில் திமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள், எழுது பொருள்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
முதியோா், மாற்றுத் திறனாளிகள், ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதல்வரின் பிறந்த நாளை திமுக நிா்வாகிகள் சிறப்பாக கொண்டாட வேண்டும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூா், ஊராட்சி நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் விழாவில் பங்கேற்று ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
படவரி...
பி.பழனியப்பன்.