சரக்கு வாகனம் மோதியதில் நகைக் கடை ஊழியா் உயிரிழப்பு
மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் நகைக் கடை ஊழியா் உயிரிழந்தாா்.
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்த முத்துக்காளை மகன் தமிழரசன் (19). இவா் கோவையில் உள்ள நகைக் கடையில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். மகாசிவராத்திரியை முன்னிட்டு, விடுமுறையில் ஊருக்கு வந்த இவா் இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல்-திருமங்கலம் நான்கு வழிச் சாலையில் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை இரவு சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் இவரது வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.