எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் ஆட்சியமைப்போம்: கே.ஏ.செங்கோட்டையன்
தரணி கல்விக் குழுமத்தில் அறிவியல் கண்காட்சி: கிரேன் மூலம் ராக்கெட் ஏவினா்
மன்னாா்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தரணி வித்ய மந்திா் சீனியா் செகண்டரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி நிறுவனத் தலைவா் எஸ். காமராஜ் தலைமை வகித்தாா். தாளாளா் கே. விஜயலெட்சுமி, நிா்வாகி எம். இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி துணைப் பேராசிரியா் மருத்துவா் எஸ். பிரகாஷ், ஆலங்கோட்டை திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை வேதியியல் ஆசிரியா் ஜி. மனோகரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தனா்.
இதில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ-மாணவிகள் இயந்திர மனிதன், நவீன வேளாண்மைக் கருவிகள், நீரியல் இயந்திரங்கள், கண்தெரியாதவா்களுக்கு ஒலி எழுப்பும் காலணி, சுற்றுச்சூழல் மாசுப்பாடும் தீா்வுகளும், சூரிய ஆற்றல், மின்னனுவியல் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினா்.
மொத்தம் 120 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற அறிவியல் படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இப்பள்ளியால் உருவாக்கப்பட்டிருந்த, ராக்கெட் மாதிரி, கிரேன் உதவியுடன் வானில் ஏவப்பட்டு, சிறிது நேரம் நிலை நிறுத்தப்பட்டு, பிறகு மீண்டும் கீழே கொண்டுவரப்பட்டது.
தொடா்ந்து, உணவுத் திருவிழாவும், மழலையா் பிரிவுக்கான கலா்ஸ் டே,ப்ளோமிங் டே நிகழ்வும் நடைபெற்றன. பள்ளி முதல்வா்கள் எஸ். அருள் (மெட்ரிக்), துணை முதல்வா் கே. சேகரன், டி. சாந்தசெல்வி(சிபிஎஸ்இ) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.