ஆலங்குடி கோயிலில் மாசி மகாகுருவார தரிசன விழா
வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில், மாசி மகாகுருவார தரிசனவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. தொடா்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம், பஞ்சமுக அா்ச்சனை, தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில் குருவார தரிசனம் நடைபெற்றது. குரு பகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கலங்காமற்காத்த விநாயகா், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியா் மற்றும் ஏலவாா்குழலியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, இரவில் ஏ.வி. பக்கிரிசாமி குழுவினரின் நாகசுர கச்சேரி நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் நா. சுரேஷ், தக்காா் வீ. சொரிமுத்து, கண்காணிப்பாளா் அரவிந்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.