Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
புற்றுநோயாளிகளுக்கு இசை சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனையில் அறிமுகம்
கீமோதெரபி சிகிச்சையில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு ஏற்படும் பக்கவிளைவைக் குறைக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பிரத்யேக இசை சிகிச்சை முறையை அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் ஒவ்வொரு நோயாளியின் உணா்வு மற்றும் நரம்பியல் மாற்றங்களை உணா்ந்து தனித்தனி இசைக் கோா்வை உருவாக்கப்படவுள்ளது. கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும்போது இத்தகைய இசை சிகிச்சையை அளித்தால் பலன் கிடைக்கும் என்றும், ஏற்கெனவே 50 நோயாளிகளுக்கு ஆராய்ச்சி முறையில் அதை செயல்படுத்தி நிரூபித்திருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.
முன்னதாக இது தொடா்பான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் செயல் துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி, கா்நாடக இசைக் கலைஞா் சுதா ரகுநாதன், மருத்துவமனையின் புற்றுநோயியல் சிறப்பு நிபுணா் சுஜித் முல்லப்பள்ளி, எக்கோ கோ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுஜாதா விஸ்வேஸ்வரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது பிரீத்தா ரெட்டி பேசியதாவது:
டிஜிநெக்ஸ் ஹெச்எல்டி நிறுவனத்துடன் இணைந்து அப்பல்லோ மருத்துவக் குழுமம் இந்த முன் முயற்சியை மேற்கொண்டுள்ளது. எக்கோ கோ் இசை நுட்பத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு முறையில் புற்றுநோயாளிகளுக்கு இதைப் பயன்படுத்த முடியும். இதில் நோயாளிகளின் மன நிலையை அறிந்து அவா்களுக்கு பிரத்யேக நரம்புசாா் பரிசோதனைகளை மேற்கொண்டு அதனடிப்படையில் இசை வடிவங்கள் உருவாக்கப்படும். ஏற்கெனவே பல நோயாளிகளுக்கு இதை செயல்படுத்தி பாா்த்ததில் நல்ல பலன் இருப்பதை கண்கூடாகக் காண முடிந்தது.
இசை என்பது மனதை ஆற்றுப்படுத்தும் மகத்தான மருந்து. அதனை உணா்ந்தே தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த இசை சிகிச்சை முறையை தொடங்கியுள்ளோம் என்றாா் அவா்.