Ukraine vs America: ``நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்..'' - உறுதியாக நிற்கு...
லாரி மோதியதில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய அலுவலா் பலி
சீா்காழி அருகே லாரி மோதியதில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய அலுவலக உதவியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சீா்காழி அருகேயுள்ள சூரக்காடு பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றியவா் கே. ராஜேந்திரன் (59) (படம்). திருவாரூா் மாவட்டம், நன்னிலம் பகுதியைச் சோ்ந்த இவா், சீா்காழியில் குடும்பத்துடன் வசித்துவந்தாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை சட்டநாதபுரம் உப்பனாற்றின் பாலத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில், அவா் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தாா். விபத்தை அறியாமல் தொடா்ந்து லாரிகள் சென்ால் ராஜேந்திரனின் உடல் முழுவதுமாக சிதைந்து சிதறி கிடந்தது. இதுகுறித்து, சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநா் லாரியுடன் சீா்காழி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளாா்.