செய்திகள் :

தெலங்கானா சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் பலி

post image

தெலங்கானாவில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில் நீா்ப்பாசன வசதியை ஏற்படுத்தவும், மூளையைப் பாதிக்கக்கூடிய ஃபுளோரைட் கனிமத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கவும், கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்த இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் சனிக்கிழமை(பிப்.22) நடைபெற்றது. அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா்.

அவா்கள் உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். அவா்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. சுரங்கத்துக்குள் சேறும் சகதியும் பெருமளவு இருப்பது மீட்புப் பணிகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வந்தது.

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்க தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், கடற்படை வீரா்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில், சுரங்க நிலச்சரிவில் 5 பேர் சேறு, சகதியில் சிக்கி பலியானதும், 3 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியானதும் அதிநவீந சிரிய ரக டிரோன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர்களில் ஒருவரான குர்பிரீத்தின் கூறுகையில், "என்ன நடக்கிறது என்பது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. சுரங்கப்பாதைக்குள் செல்வதற்கு நாங்கள் அனுமதி கேட்டோம், ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள அனைவரும் மிகவும் கவலையில் உள்ளனர்" என்று கூறினார்.

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் மாசித் திருவிழா பிப்.20 ஆம் தேதி கொடி... மேலும் பார்க்க

"நம் ஒரே இலக்கு இதுதான்": பிறந்த நாளில் முதல்வர் உறுதி மொழி

தமிழ்நாட்டின் நலனை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம் என தொண்டர்கள் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72 ஆவது பிறந்தநாளை கொண்ட... மேலும் பார்க்க

கால்பந்து வீரரிடம் வழிப்பறி! வாகனம் பறிப்பு!

தென் அமெரிக்க நாடான உருகுவேவைச் சேர்ந்த கால்பந்து வீரரிடம் மெக்சிகோ நாட்டில் வழிப்பறி செய்யப்பட்டு அவரது வாகனம் பறிக்கப்பட்டுள்ளது. உருகுவே நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் நிகோலஸ் ஃபோன்சேகா (வயது 24)... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் சனிக்கிழமை கொண்டாடும் நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.... மேலும் பார்க்க

மணிப்பூர்: கிளர்ச்சியாளர் உள்பட 5 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் ஒருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் இன்று (மா.1) தெரிவித்துள்ளனர்.காங்போக்பி மாவட்டத்த... மேலும் பார்க்க

முதல்வர் பிறந்த நாள்: ராகுல் காந்தி, விஜய், ரஜினி வாழ்த்து!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 1) தனது 72-வது ப... மேலும் பார்க்க