பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் பலியிடுவதைத் தவிர்க்க வேண்டும்! மக்களுக்கு அரசர் வலிய...
Zelensky: 'ட்ரம்ப் எப்படி ஜெலன்ஸ்கியை அடிக்காமல் விட்டார்?' - USA Vs Ukraine-ல் ரஷ்யா ரியாக்ஷன்
நேற்று நடந்த ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு, வார்த்தைப் போராக முற்றி படுதோல்வியில் முடிந்துள்ளது.
இந்த சந்திப்பில் கனிம ஒப்பந்தம் கையெழுத்தாவதுடன், ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டுமே நடக்கவில்லை.
அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களின் சந்திப்பு குறித்து ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா தனது டெலிகிராமில், "இதுவரை ஜெலன்ஸ்கி கூறிய பொய்களிலேயே மிகப்பெரிய பொய் 2022-ம் ஆண்டு உக்ரைன் எந்தவொரு ஆதரவும் இல்லாமல் தனியாக நின்றது என்று கூறியதுதான்.

எப்படி ட்ரம்ப் மற்றும் வான்ஸ் அந்த பொய்யாளரை அடிக்காமல் விட்டார்கள் என்பது அதிசயம். ஜெலன்ஸ்கி ஒருவரிடமும் நன்றாக நடந்துகொள்வதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ், ஜெலன்ஸ்கியை 'இழிவான பன்றி' என்றும் ஜெலன்ஸ்க்கிக்கு 'ஓவல் அலுவலகத்தில் சரியான அறை கிடைத்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யாவோ இவ்வாறு காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
