செய்திகள் :

``தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எந்த மாநிலத்திலும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது!” - திருமாவளவன்

post image

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கு பெற்று பின்னர் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“தமிழக ஆளுநர் எக்ஸ் வலைதளத்தில், ‘தமிழகத்தில் மும்மொழி தேவை. இளைஞர்களை எதிர்காலத்தை தடுக்கின்றனர்’ என குற்றம் சாட்டி உள்ளது பற்றி கேட்கிறீர்கள். ஆர்.எஸ்.எஸ் அஜண்டாவை நடைமுறைப்படுத்தவே நியமிக்கப்பட்டுள்ளவர் தமிழக ஆளுநர் ரவி. இந்தியாவில் பழமொழிகள் பேசுகின்ற தேசிய இனங்கள் வாழ்கின்றோம். அதிலே ஒன்று இந்தி.

தொல்.திருமாவளவன்

தமிழை தாய்மொழியாக கொண்டவர்களை கட்டாயம் இந்தி கற்க வேண்டும் என்று சொல்லுவது அவர்கள் ஆதிக்க போக்கை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டில மட்டும் அல்ல, இந்தி அல்லாத பிற மொழியை தாய்மொழியாக கொண்ட பிற மாநிலத்திலும் இந்தி திணிக்க கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தை நிலைப்பாடு.

ஆர்.என். ரவி ஒரே தேசம், ஒரே மொழி, என்கிற ஆர்.எஸ்.எஸ் அர்ஜெண்டாவை நடைமுறைப்படுத்துவதற்காக இப்படி தொடர்ந்து பேசி வருகிறார். தமிழ்நாட்டு மக்களை எதிர்காலத்தில் இந்தி பேசும் மக்களாக மாற்றுவது, ஒரே தேசம், ஒரே மொழி உருவாக்குவது இந்திக்குப் பிறகு சமஸ்கிருதமே இந்தியாவில் ஒற்றை மொழி என மாற்றுவது என்ன செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள். ஆர்.என்.ரவியின் மாயாஜால பேச்சுக்கு இணங்க மாட்டார்கள்.

ஆளுநர் ஆர்.என். ரவி

வரும் 2026 -ல் 25 இடங்களில் போட்டியிடுவது தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது என்று வன்னி அரசு கூறியுள்ளது பற்றி கேட்கிறீர்கள். அதுகுறித்து, தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம்.

விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் பணியை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்... நடைமுறைப்படுத்த வேண்டும்...களமிறங்கி பணியாற்ற வேண்டும் என ஊக்கப்படுத்தி வருகிறோம். அந்த வகையில், இயக்கத்தோழர்களை இயக்குவது, அணி திரட்டுவது என்னும் பொருளில் விடுதலை சிறுத்தைகள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளோம். எனவே, விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் அரசியலில் காய் நகர்த்த முடியாது என்ற நம்பிக்கை ஊட்டுகிறோம்’ என்றவரிடம்

‘திருமாவளவனை விலை கொடுத்து வாங்க முடியாது என்று கூறியுள்ளீர்கள். அப்படியென்றால், யார் உங்களை விலை கொடுத்து வாங்க முயற்சித்தார்கள்?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பதில் எதுவும் கூறாமல் கடந்து சென்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``பெண்களை ஆபாசமாகவும், பாலியல் வக்கிரத்தோடும் பேசுவது தமிழ் தேசியம் அல்ல!” - ஜோதிமணி காட்டம்

தர்மபுரியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு அறுவெறுக்கத்தக்க வகையில் ஆபாசமாக உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்... மேலும் பார்க்க

``திமுக செல்வாக்கு குறைந்ததால், மும்மொழிக் கொள்கையை வைத்து திசை திருப்புகிறார்கள்'' -கே.பி.முனுசாமி

அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டார். அப்போது, பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உத... மேலும் பார்க்க

Trump Vs Zelensky: `அவமரியாதை செய்து விட்டார்' - கொதிக்கும் டிரம்ப்; நன்றி சொல்லும் ஜெலென்ஸ்கி..

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - இருவருக்கும் இடையே நடந்த முடிந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் தங்களது எக்ஸ் பக்கத்தில் அந்தப் பேச்சுவார்த்தை குறித்து பதிவிட்டுள்ளனர். அ... மேலும் பார்க்க

Trump Vs Zelensky: `நாங்க இருக்கோம்..' - ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் ஆதாரவு யாருக்கு?!

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒன்று, 'ரஷ்யா - உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்?'.நேற்று நடந்த ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு இந்தக் கேள்விக்கான பதிலின் ஆரம்பப்புள்ளியாக அமையும் என்... மேலும் பார்க்க

Ukraine vs America: ``நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்..'' - உறுதியாக நிற்கும் ஜெலன்ஸ்கி!

உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றிருந்தார். வெள்ளை மாளிகையில் நடந்த இந்த சந்திப்பில்... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெறும் வயிற்றில் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா?

Doctor Vikatan: வெறும் வயிற்றில் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா... இதன் பலன்களை முழுமையாகப்பெற எப்போது, எப்படி, எத்தனை சாப்பிட வேண்டும்.... பேரீச்சம் பழங்களில் பல வகைகள் கிடைக்கின்றனவே... கறுப்புபேரீச்சை,... மேலும் பார்க்க