செய்திகள் :

``பெண்களை ஆபாசமாகவும், பாலியல் வக்கிரத்தோடும் பேசுவது தமிழ் தேசியம் அல்ல!” - ஜோதிமணி காட்டம்

post image

தர்மபுரியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு அறுவெறுக்கத்தக்க வகையில் ஆபாசமாக உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சீமான் பொதுவெளியில், எல்லை கடந்து வெளிப்படையாக அறுவெறுக்கத்தக்க வகையில் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசுகிறார். இவரெல்லாம் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு. பாதிக்கப்பட்ட பெண்ணை அவமதிப்பது மட்டுமல்லாமல் பெண் இனத்தையே சீமான் அவமதிக்கிறார். அவரைப் பொறுத்தவரை பெண்ணை தூக்கிப்போய் பாலியல் வன்கொடுமை செய்யாமல் வேறு எவ்விதமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டாலும் அது பிரச்னையில்லை. எவ்வளவு வக்கிரமான மனநிலை!.

ஜோதிமணி எம்.பி

அந்தக் குற்றச்சாட்டைத் தான் விஜயலட்சுமி சீமான் மீது வைக்கிறார். ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டு அவரை ஏமாற்றுவதும் சட்டப்படி கடுமையான குற்றமே என்பதை சட்டம் சீமானுக்குப் புரிய வைக்கும். இப்படி, ஆபாசமாக பாலியல் வக்கிரத்தோடு, பெண்களை அவமதிக்கும் வகையில், பெண்களின் பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசுகிற ஒருவரை ஒரு சமூகமாக நாம் கடுமையாக எதிர்க்கவேண்டும். இப்படிப்பட்ட பாலியல் வக்கிரம் பிடித்தவர்களுக்கு, பெண்களை கேவலமாக நினைப்ப்பவர்களுக்கு பொதுவாழ்வில் எவ்வித இடமும் இருக்கக்கூடாது.

சீமானின் இந்தப் பேச்சிற்காக காவல்துறை அவர் மீது தனியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் இப்படிப்பட்ட கேவலமான பேச்சை, செயலை ஆதரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். தமிழ் தேசியம் என்பது பெண்களை ஆபாசமாகவும், பாலியல் வக்கிரத்தோடும் பேசுவதல்ல. பெண்களின் கண்ணியத்தை மதிக்கக்கூடியது. வீரத்தைப் போற்றக் கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எந்த மாநிலத்திலும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது!” - திருமாவளவன்

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கு பெற்று பின்னர் சென்னை செல்வதற்காக திருச்சி... மேலும் பார்க்க

``திமுக செல்வாக்கு குறைந்ததால், மும்மொழிக் கொள்கையை வைத்து திசை திருப்புகிறார்கள்'' -கே.பி.முனுசாமி

அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டார். அப்போது, பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உத... மேலும் பார்க்க

Trump Vs Zelensky: `அவமரியாதை செய்து விட்டார்' - கொதிக்கும் டிரம்ப்; நன்றி சொல்லும் ஜெலென்ஸ்கி..

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - இருவருக்கும் இடையே நடந்த முடிந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் தங்களது எக்ஸ் பக்கத்தில் அந்தப் பேச்சுவார்த்தை குறித்து பதிவிட்டுள்ளனர். அ... மேலும் பார்க்க

Trump Vs Zelensky: `நாங்க இருக்கோம்..' - ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் ஆதாரவு யாருக்கு?!

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒன்று, 'ரஷ்யா - உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்?'.நேற்று நடந்த ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு இந்தக் கேள்விக்கான பதிலின் ஆரம்பப்புள்ளியாக அமையும் என்... மேலும் பார்க்க

Ukraine vs America: ``நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்..'' - உறுதியாக நிற்கும் ஜெலன்ஸ்கி!

உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றிருந்தார். வெள்ளை மாளிகையில் நடந்த இந்த சந்திப்பில்... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெறும் வயிற்றில் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா?

Doctor Vikatan: வெறும் வயிற்றில் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா... இதன் பலன்களை முழுமையாகப்பெற எப்போது, எப்படி, எத்தனை சாப்பிட வேண்டும்.... பேரீச்சம் பழங்களில் பல வகைகள் கிடைக்கின்றனவே... கறுப்புபேரீச்சை,... மேலும் பார்க்க