மார்ச் 4 முதல் புதிய வரி விதிப்பு அமல்: டிரம்ப்பால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்...
Trump Vs Zelensky: `நாங்க இருக்கோம்..' - ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் ஆதாரவு யாருக்கு?!
உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒன்று, 'ரஷ்யா - உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்?'.
நேற்று நடந்த ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு இந்தக் கேள்விக்கான பதிலின் ஆரம்பப்புள்ளியாக அமையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்தனை எண்ணங்களுக்கு நேர் எதிராக இந்த இருவரின் சந்திப்பும் பெரும் தோல்வியில் முடிந்துள்ளது.
'நாங்கள் தனியாக நின்றோம்' என ஜெலன்ஸ்கி கூற, 'நாங்கள் 350 பில்லியன் டாலர்களை கொடுத்துள்ளோம்' என்று ட்ரம்ப் கூற வார்த்தைப் போர் முற்றி, ஜெலன்ஸ்கி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட முக்கிய நோக்கமான கனிம வள ஒப்பந்தம் கையெழுத்தாகாமலே போய்விட்டது.

இந்த கார சார விவாததம் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போரில் 'உங்கள் பக்கம் நிற்கிறோம்' என்று ஜெலன்ஸ்கிக்கு தோள் கொடுத்துள்ளது ஐரோப்பிய நாடுகள்.
பிரான்ஸ், ஜெர்மனி, போலாந்து, ஸ்பெயின், டென்மார்க், நெதர்லாந்து, போர்ச்சுகல், நார்வே, பின்லான்ட், பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பிற்கு பிறகு, 'நாங்கள் இருக்கிறோம்' என்று அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டு ஜெலன்ஸ்கிக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
