Champions Trophy: ஒரே மைதானத்தில் போட்டிகள்; இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் அட்வா...
மத்திய கட்டட ஆராய்ச்சி மையத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
மத்திய கட்டட ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Stenographer
காலியிடங்கள்: 3
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 ஆங்கில வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100
பணி: Junior secretariat Assistant(General)
காலியிடங்கள்: 16
1. General - 10
2. Finance & Accounts - 3
3. Stores & Purchase - 3
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Driver(Non-Technical)
காலியிடங்கள்: 1
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 3 பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? பொதுத்துறை நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் பணிக்குரிய சுருக்கெழுத்து தேர்விலும், தட்டச்சு தேர்விலும், ஓட்டுநர் திறன் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி, பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://cbri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.3.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.