நியூசி.க்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு பதில் அர்ஷ்தீப் சிங் விளையாடுகிறாரா?
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குருப் பி பிரிவில் ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
இதையும் படிக்க: ஆஸி.யின் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; அரையிறுதியில் விளையாடுவாரா?
முகமது ஷமிக்கு ஓய்வா?
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள அதன் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டிக்கான பிளேயிங் லெவனில் மாற்றம் மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த போட்டியில் முகமது ஷமி மூன்று ஓவர்கள் வீசிய பிறகு அவருக்கு பந்துவீசுவதில் அசௌகரியம் ஏற்பட்டது. நேற்று நடைபெற்ற பயிற்சியிலும் 6-7 ஓவர்கள் மட்டுமே அவர் வீசியுள்ளார்.
இதையும் படிக்க: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவிப்பு!

அர்ஷ்தீப் சிங் நேற்று நடைபெற்ற பயிற்சியின்போது, பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னோ மோர்க்கல் முன்பாக 13 ஓவர்கள் பந்துவீசி தீவிர பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். நியூசிலாந்துக்கு எதிரான நாளையப் போட்டியில் முகமது ஷமிக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையில் 5 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், நாளை போட்டியில் அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.