செய்திகள் :

தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் வருகை?

post image

மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் உதய நாளையொட்டி, தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் வருகைதர வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் உதய நாளாக ஆண்டுதோறும் மார்ச் 10 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு, ஒடிஸா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 8 பயிற்சி மையங்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை மையத்தில் நடைபெறவுள்ள உதய நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 7 ஆம் தேதியில் வருகை தர வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இதையும் படிக்க:வேலைவாய்ப்பின்மை அரசுக்கு பெரிய சவால்: உ.பி. அரசு

மத்திய அமைச்சர் அமித் ஷா, கடந்த ஜனவரி மாதம் 31-ல் முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் இல்லத் திருமண விழாவுக்கு வருகை தந்தார்.

தொடர்ந்து, கோவையில் பாஜக அலுவலகத் திறப்பு விழாவுக்காக பிப்ரவரி 25 ஆம் தேதியிலும் தமிழகத்துக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மத்திய தொழிற்படை பாதுகாப்பு உதய நாள் நிகழ்ச்சிக்காக தமிழகம் வருகை தரவிருப்பதாகவும் சமூக ஊடகங்கள் செய்திகள் பரவி வருகின்றன.

6 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது: அண்ணாமலை

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளி... மேலும் பார்க்க

குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடிய முதல்வர்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை துணை முதல்வரும் அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.உத... மேலும் பார்க்க

பிப்ரவரியில் சென்னை மெட்ரோ ரயிலில் 86.65 லட்சம் பேர் பயணம்!

கடந்த பிப்ரவரி மாதத்தில் 86.65 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெட்ரோ ரயில் நிறு... மேலும் பார்க்க

ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, தமிழைக் காப்பேன்: முதல்வர்

ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, தமிழைக் காப்பேன் என்று திமுக கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தனது கட்சியினருக்கு கடி... மேலும் பார்க்க

முதல்வர் பிறந்தநாள்: தமிழில் கையெழுத்திட்டு ஆளுநர் வாழ்த்துக் கடிதம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் கையொப்பமிட்டு பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 1) தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்... மேலும் பார்க்க